Home /News /tamil-nadu /

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ் ரவியாக செயல்படுகிறார் - திருமாவளவன் காட்டம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ் ரவியாக செயல்படுகிறார் - திருமாவளவன் காட்டம்

திருமாவளவன்

திருமாவளவன்

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, ஆர்.எஸ்.எஸ் ரவியாக தன்னை காட்டிக்கொண்டு சமாதான பரப்புரையை மேற்கொள்வது அதிர்ச்சி அளிக்கிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளன் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சின்னப்பனையூரில் விடுதலை சிறுத்தை கட்சியின் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.  அவரது மறைவையொட்டி விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று மதியம் அவரது இல்லத்திற்கு நேரில் வந்து அவரது உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு கட்சியின் சார்பில் 1.55 லட்சம் நிதி உதவியும் அளித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ’தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, ஆர்.எஸ்.எஸ் ரவி ஆக இயங்குகிறார். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், பேச்சிலும் தன்னை ஒரு ஆர்எஸ்எஸ்காரராகவே காட்டிக் கொள்கிறார். அவர் தனது ஆளுநர் பதவியில் இருந்து விலகி முழுநேர ஆர்எஸ்எஸ் தொண்டராக பணியாற்றுவது தான் பொருத்தமானது. அவர் பதவி விலக வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் விருப்பம் என்பதை விடுதலைச்சிறுத்தை கட்சியின் வாயிலாக சுட்டிக் காட்டுவதாகவும், அவரது போக்கு மிகவும் ஆபத்தானது. இது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்திய தேசத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய அணுகுமுறையாகும்.

அவர் ஆளுநர் பதவியில் இருந்துகொண்டு சனாதன கொள்கைகளை பற்றி பரப்புரை செய்வது அதிர்ச்சி அளிப்பதாகவும், அதனை விடுதலை சிறுத்தை கட்சி வன்மையாக கண்டிப்பதாகவும் கூறினார்.

மேலும் உத்தரபிரதேசத்தில் நபிகள் நாயகத்தை தவறாக பேசிய பாஜகவை சேர்த்த நுபூர் சர்மாவை கைது செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மீது யோகி அரசு வன்முறையை தூண்டி விட்டுள்ளாதாகவும், இந்த போராட்டத்தை முன்னின்று பங்கேற்ற ஜாவித் அகமது என்பவர் வீட்டை யோகி அரசு சட்டத்திற்குப் புறம்பாக கட்டிக் உள்ளதாக பொய்யாக கூறி அவரது வீட்டை இடித்து தரைமட்டமாக்கி உள்ளது.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக படிக்கும் அவரது மகள் ஒரு அமைப்பின் மூலம் சமூக நீதிக்காக, சகோதரத்துக்காக போராடி வருகிறார். அதனைப் பொறுத்துக் கொள்ளாத யோகி அரசு அவரது வீட்டை இடித்து இருப்பது மிகவும் வன்மையான கண்டனத்துக்குரியது.

இது மிக மோசமான பயங்கரவாத போக்கு. இது ஒட்டுமொத்த நாட்டுக்கே பரவக்கூடிய அநாகரீகமான, அருவருப்பான அணுகுமுறை. இந்த அராஜகத்தை விடுதலை சிறுத்தை கட்சி வன்மையாக கண்டிப்பதாகவும் கூறினார்.
Published by:Karthick S
First published:

Tags: RN Ravi, Thirumavalavan

அடுத்த செய்தி