Home /News /tamil-nadu /

தமிழகத்தில் பா.ஜ.க காலூன்றிவிட்டார்கள் என்பது மாயை- திருமாவளவன் விமர்சனம்

தமிழகத்தில் பா.ஜ.க காலூன்றிவிட்டார்கள் என்பது மாயை- திருமாவளவன் விமர்சனம்

தொல். திருமாவளவன்

தொல். திருமாவளவன்

தமிழ்நாட்டில் பா.ஜ.க காலூன்றிவிட்டது என்பது மாயை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    பா.ஜ.கவின் மதவாத அரசியலுக்கு வெற்றியாக இருக்கலாம். ஆனால் அதை வைத்துக்கொண்டு தமிழகத்தில் அவர்கள் காலூன்றி விட்டார்கள் என கதை கட்டுவது கற்பனை மாயை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் கூட்டணியில் இடம்பெற்ற நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் முக ஸ்டாலின் சந்தித்து வாழ்த்துக் கூறினார். அவருடன் சென்னை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர்களும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ‘பெருவாரியான நகர்ப்புற உள்ளாட்சி இடங்களை தி.மு.க தலைமையிலான கூட்டணி கைப்பற்றும் என தொடர்ச்சியாக கூறி வந்தேன் என்று மெய்ப்பிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 8 மாத கால அ.தி.மு.க அரசின் மதிப்பிற்கும், தி.மு.க தலைமையிலான கூட்டணியின் நம்பகத்தன்மைக்கும் மக்கள் அளித்திருக்கும் மாபெரும் பரிசு இந்த வெற்றி. அங்கொன்றும் இங்கொன்றுமாய் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ.க வெற்றி பெற்றிருப்பதை தமிழகத்தில் பா.ஜ.க வலிமை பெற்றுவருவதாக ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் அதற்கு இங்கு வாய்ப்பில்லை.

    இது பா.ஜ.கவின் மதவாத அரசியலுக்கு வெற்றியாக இருக்கலாம். ஆனால் அதை வைத்துக்கொண்டு தமிழகத்தில் அவர்கள் காலூன்றி விட்டார்கள் என கதை கட்டுவது கற்பனை மாயை. தி.மு.க தலைமையிலான கூட்டணி சமூகநீதி கூட்டணி. தி.மு.க அரசு சமூக நீதி அரசு. எனவே, தமிழ்நாட்டில் சனாதான சக்திகளுக்கு மட்டுமல்ல. அவர்களுக்கு துணை போகுபவர்களுக்கும் இடமில்லை என மக்கள் நிரூபித்துள்ளார்கள். இந்த வெற்றியை தொடர்ந்து தமிழக முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்து இருக்கிறோம்.

    கூட்டணி கட்சியினரின் ஒற்றுமையால் இந்த வெற்றி சாத்தியமானது - மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

    உள்ளாட்சி அமைப்புகளுக்கான மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சி தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கோருகிற பட்டியலை வழங்கியிருக்கிறோம். அதை நிச்சயம் முதலமைச்சர் பரிசளிப்பார் என நம்புகிறோம்.

    அதிமுக 2-வது இடம், பா.ஜ.கவுக்கு இரண்டாவது இடம் என்பது அவர்களுக்குள் நடக்கும் சண்டை. எங்களைப் பொறுத்தவரை தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகளே முன்னணியில் உள்ளனர். பல இடங்களில் பா.ஜ.க டெபாசிட் இழந்து உள்ளது. பா.ஜ.க உடன் இணையும் எந்தக் கட்சியும் அழிந்து விடும் என்பதற்கு வட இந்தியாவில் பல சான்றுகள் உள்ளன’ என்று தெரிவித்தார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: BJP, Local Body Election 2022, Thirumavalavan

    அடுத்த செய்தி