தூய்மைப் பணியாளர்களுக்கு 3 மாத ஊதியத்தை ஊக்கத்தொகையாக வழங்கவேண்டும் - திருமாவளவன் எம்.பி.,

நேரடியாக உள்ளாட்சித்துறையில் பணியாற்றுகிறவர்களைத்தவிர ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் மூலம் அமர்த்தப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்களும் உள்ளனர்.

தூய்மைப் பணியாளர்களுக்கு 3 மாத ஊதியத்தை ஊக்கத்தொகையாக வழங்கவேண்டும் - திருமாவளவன் எம்.பி.,
நேரடியாக உள்ளாட்சித்துறையில் பணியாற்றுகிறவர்களைத்தவிர ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் மூலம் அமர்த்தப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்களும் உள்ளனர்.
  • Share this:
தூய்மைப் பணியாளர்களுக்கு 3 மாத ஊதியத்தை ஊக்கத்தொகையாக வழங்கவேண்டும் என
தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா தொற்றைத் தடுப்பதில் சுகாதாரத்துறை ஊழியர்களைப் போலவே உயிரைப் பணயம் வைத்து தூய்மைப் பணியாளர்களும் வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு மூன்று மாத ஊதியத்தை ஊக்கத்தொகையாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.


தமிழ்நாட்டில் உள்ள 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், மற்றும் 12525 கிராம ஊராட்சிகளில் மொத்தம் 64583 தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இது தவிரவும் அரசின் பல்வேறு துறைகளிலும் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் தூய்மைப் பணியைச் செய்து வருகிறார்கள். நேரடியாக உள்ளாட்சித்துறையில் பணியாற்றுகிறவர்களைத்தவிர ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் மூலம் அமர்த்தப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்களும் உள்ளனர்.

தற்போது கொரோனா பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் பணியில் இந்தத் தொழிலாளர்கள் தமது உயிரைப் பணயம் வைத்து வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்குப் போதுமான அளவில் முகக் கவசங்கள், கையுறைகள் உள்ளிட்ட பாதுகாப்புக் கருவிகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம். அதுமட்டுமின்றி அவர்கள் அனைவருக்கும் மூன்று மாத ஊதியத்தை ஊக்கத்தொகையாக தமிழக அரசு வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
First published: April 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading