பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு - மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் கோரிக்கை

திருமாவளவன்

துணைவேந்தர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் கோரிக்கைவைத்துள்ளார்.

  • Share this:
தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் சட்டம் இயற்றினால் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் இட ஒதுக்கீட்டை பின்பற்ற நான் தயார் என ஆளுநர் தெரிவித்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்துப் பேசினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு பல்கலைக் கழகத்திலும் தற்போது பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவர் கூட துணைவேந்தர் பதவிகளில் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார். தகுதியானவர்கள் இருந்தும் அவர்கள் நியமிக்கப்படாமல் இருக்கிறார்கள் என்றும் தற்போது நியமனம் செய்யப்படவிருக்கும் பெரியார், அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களில் பட்டியலினத்தவரை நியமிப்பது குறித்து ஆலோசனை செய்ய வேண்டும் என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவருடன் மாளிகையில் சந்தித்து கோரிக்கை வைத்தார் திருமாவளவன்.

strong>Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது துணைவேந்தர் நியமனங்களில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்றும் தமிழக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றினால் இட ஒதுக்கீட்டை பின்பற்ற தயார் என்றும் ஆளுநர் தெரிவித்ததாக திருமாவளவன் கூறினார். எனவே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் முன்வந்து இந்த இட ஒதுக்கீடுக்கு செயல் வடிவம் தர வேண்டும் என திருமாவளவன் என்று தெரிவித்தார்.
Published by:Karthick S
First published: