ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 4 பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கூடாது: திருமாவளவன் வலியுறுத்தல்!

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 4 பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கூடாது: திருமாவளவன் வலியுறுத்தல்!

திருமாவளவன்

திருமாவளவன்

இலங்கையில் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவே தமிழக அரசு அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    ராஜீவ் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட ஆறு பேரில் 4 நபர்களை இலங்கைக்கு அனுப்பாமல் தமிழகத்திலேயே தங்க வைக்க வேண்டும் திருமாவளவன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன், தன்னை விடுவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் கடந்த மே.18ம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் , 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டது. சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி அவரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ததது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிசந்திரன் ஆகியோர் தங்களை சிறையில் இருந்து விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்த நிலையில் இன்று தீர்ப்பளித்தனர். அதில், பேரறிவாளன் வழக்கில் அளிக்கப்பட்டட தீர்ப்பு இந்த வழக்கில் தண்டனை பெற்ற ஆறு பேருக்கும் பொருந்தும் என்று கூறி நளினி உட்பட ஆறுபேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளனர்.

    இந்த நிலையில் விடுதலையான ஆறு பேரில் 4 ஈழத் தமிழர்கள் என்பதால் அவர்களை இலங்கைக்கு மீண்டும் திருப்பி அனுப்பக் கூடாது என்றும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆறு பேரையும் விடுதலை செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கக் கூடிய செய்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி இதை வரவேற்கிறது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: மக்களாட்சி கோட்பாட்டிற்கு வரலாற்று சிறப்புமிக்க அணிந்துரையாக 6 பேர் விடுதலைக்கான தீர்ப்பு அமைந்திருக்கிறது - முதல்வர் ஸ்டாலின்

    அதே வேளையில் தொடர்ந்து தமிழக அரசின் தீர்மானங்களை முறையாக கையாலாத ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கடுமையான விமர்சனத்தை சுட்டிக் காட்டியுள்ளது என்றும் ஏற்கனவே தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று கூறியுள்ளோம் என்றார்.

    விடுதலை செய்யப்படுவதில் நான்கு பேர் ஈழத் தமிழர்கள் என்பதால் அவர்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்புவதோ அல்லது சிறப்பு முகாமில் தங்க வைப்பதோ செய்யக்கூடாது. இலங்கையில் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவே தமிழக அரசு அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஒரு சில கட்சிகளைத் தாண்டி அனைத்து கட்சியிலும் ஆறு பேரும் விடுதலை ஆக வேண்டும் என்று போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் அந்த வகையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா முதல் ஸ்டாலின் வரை அதற்கான முன்னெடுப்புகளை எடுத்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

    Published by:Arunkumar A
    First published:

    Tags: Nalini, Rajiv Gandhi Murder case, Srilanka, Thirumavalavan