• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • விசிக கொடியேற்றும் விவகாரம்.. போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இனி இருக்காது - திருமாவளவன்

விசிக கொடியேற்றும் விவகாரம்.. போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இனி இருக்காது - திருமாவளவன்

திருமாவளவன்

திருமாவளவன்

விசிக கொடியேற்றும் விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்த வேண்டிய தேவை இனி இருக்காது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    சேலம் மாவட்டம் மோரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியை ஏற்றுவது தொடர்பாக காவல்துறையினர் தடை விதித்ததால் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக,அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து பேசினார்.

    இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன்,
    மோரூரில் சாதியவாத சக்திகள் மற்றும் காவல்துறையினர் தலித் மக்கள் மீது வன்முறையில் ஈடுபட்டனர். இது குறித்து பேச முதலமைச்சர் தயாராக இருந்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து அவரை சந்தித்து பேசினோம், அனைத்து விவரத்தையும் கேட்டுக்கொண்ட முதலமைச்சர், இது தொடர்பாக பரிசீலிப்பதாக தெரிவித்ததாக கூறினார்.

    பல கட்சிகளின் கொடிகள் பறக்கும் இடத்தில் விசிகவின் கொடி ஏன் பறக்க கூடாது என கிராம மக்கள் கொடியேற்ற சென்ற போது, சாதிய வாத சக்திகளும், காவல்துறையும் தலித் மக்களுக்கு எதிரக வன்முறையில் ஈடுபட்டனர். இது குறித்து முதலமைச்சரிடம் பேசியதால் சேலம், ஈரோடு மாவட்டங்களில் நடக்க இருந்த போராட்டங்கள் கைவிடப்பட்டது.

    Also Read : கரூர் அருகே தனியார் நிலத்தில் உள்ள குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

    பாமக தரப்பில் இருந்தோ, தலித் அல்லாத மக்களிடம் இருந்தோ கொடி ஏற்ற எதிர்ப்பு இல்லை. பாமக, தேமுதிக, விஜய் ரசிமன்ற பெயர் பலகை போன்றவை அந்த இடத்தில் இருந்தது. அதனாலே விசிகவின் கொடியை ஏற்ற முன்வந்தனர். பல மாவட்டங்களில் பல இடங்களில் காவல்துறையினர் இது போன்று தடை செய்கின்றனர்.

    வருவாய் துறை அனுமதி பெற வேண்டும், காவல்துறையின் அனுமதி பெற வேண்டும் என வழக்கத்திற்கு மாறாக கூறுகின்றனர். எந்த ஆட்சியாக இருந்தாலும் இது போன்று நடைபெறுவது வழக்கமாக உள்ளது. வன்முறையில் ஈடுபட்ட தலித் அல்லாதவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தவில்லை. தலித் சமூகத்தினர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது. சில சமூகத்தினருடன் நெருக்கமாகவும், தள்ளியும் காவல்துறையுனர் இருக்கின்றனர். இதனால் திமுகவின் கூட்டணி கட்சியாக இருப்பதால், தோழமையுடன், உரிமையோடு கோரிக்கையை முன்வைத்ததாக கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: