Home /News /tamil-nadu /

நாடுதழுவிய முழு அடைப்பு கட்டாயமாகக் கடைபிடிக்கப்பட வேண்டும் - தொல்.திருமாவளவன் எம்.பி.,

நாடுதழுவிய முழு அடைப்பு கட்டாயமாகக் கடைபிடிக்கப்பட வேண்டும் - தொல்.திருமாவளவன் எம்.பி.,

திருமாவளவன்

திருமாவளவன்

"நம்மை நாம் தற்காத்துக் கொள்வதற்கும் நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கும் இதை விட்டால் வேறு வழியில்லை" என்று உருக்கமாக தெரிவித்திருக்கிறார் பிரதமர்.

    கொரோனா அபாயம் காரணமாக 21 நாட்கள் நாடுதழுவிய முழு அடைப்புக்கு பிரதமர் அறிவிப்பு வெளியிட்டிருப்பதை அனைவரும் கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டும் என தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்திய பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள், ’கையெடுத்துக் கும்பிடுகிறேன்; ஒவ்வொருவரும் அவரவர் வீட்டிலேயே இருங்கள்; வீட்டை விட்டு வெளியே வந்தால் உங்கள் வீட்டுக்குள் கொரோனா அடியெடுத்து வைக்கும்’ என்று மிகுந்த உருக்கத்தோடு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதை நாம் ஒவ்வொருவரும் கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டும்.

    நம்மை நாம் தற்காத்துக் கொள்வதற்கும் நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கும் இதை விட்டால் வேறு வழியில்லை என்பதுதான் இந்த 21 நாள் ஊரடங்கு உத்தரவுக்கு அடிப்படையான காரணம்.
    ஏராளமான பொருளாதார சிக்கல்களை, வேறுபல நெருக்கடிகளைச் சந்திக்க நேரலாம். ஆனால், வேறு வழியில்லை மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வேண்டுகோளுக்கு முழு ஒத்துழைப்பை நல்குவோம். நாட்டு நலன்களுக்காக, நமது நலன்களுக்காக, நம்முடைய குடும்பத்தினரின் நலன்களுக்காக! எனவே, இந்த வேண்டுகோளை அனைவருக்கும் நான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக விடுக்கிறேன்.” இவ்வாறு அவர் தெவித்துள்ளார்.

    Also see:
    Published by:Rizwan
    First published:

    Tags: Thol. Thirumavalavan, VCK

    அடுத்த செய்தி