சென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்! முதல்வரிடம் திருமாவளவன் கோரிக்கை

ராஜபக்ச குடும்பம் மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் அமரும் அவலம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சமூகத்திற்கு நீதி கிடைக்க வாய்ப்பில்லை என்ற ஒரு நிலை உருவாகியுள்ளது.

சென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்! முதல்வரிடம் திருமாவளவன் கோரிக்கை
திருமாவளவன்
  • News18
  • Last Updated: November 17, 2019, 8:57 PM IST
  • Share this:
சென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கைவைத்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்துப் பேசினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘2 கோரிக்கைகளை முன்வைத்தனர். உள்ளாட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் மற்றும் சென்னை மாநகராட்சியை தனி தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான கோரிக்கைகளாக முன் வைத்துள்ளோம். தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட இருக்கும் உதவித் தொகையை தற்போது மத்திய அரசு வெகுவாக குறைத்து இருப்பதால் ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளில் மத்திய அரசு 6,000 கோடி ரூபாய் ஆண்டுக்கு ஒதுக்கியது. இந்த ஆண்டு 2,900 கோடி ரூபாயாக வெகுவாக குறைத்துள்ளது. இதனால் தனியார் கல்லூரிகளில் மேனேஜ்மெண்ட் கோட்டா பிரிவில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை. இதனால் தனியார் கல்வி நிறுவனங்கள் பொறியியல் கல்லூரிகள் செயல்படாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. ஆண்டுக்கு பல கல்லூரிகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களும் பாதியிலேயே படிப்பை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை வழங்கி அதனை ஈடுகட்ட வேண்டும் என்கிற கோரிக்கையை முதல்வர் இடத்தில் முன்வைத்துள்ளோம்.


இதுதொடர்பான இரண்டு கோரிக்கைகளையும் நிறைவேற்ற அரசியல் சார்பற்ற வல்லுனர் குழுவை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம். இந்த இரண்டு கோரிக்கைகளை மனுவாக பெற்றுக் கொண்ட முதல்வர் பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.

ஐ.ஐ.டி சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளோம். தற்போது இதைப் பற்றி பேசவில்லை. முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையைத் திட்டமிட்டு நடத்திய ராணுவ ஆலோசகர் கோத்தபய ராஜபக்ச மீண்டும் ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்.

கடந்த பத்தாண்டுகளில் பன்னாட்டுப் புலனாய்வு விசாரணை நடத்தப்பட்டு இருந்தால் ராஜபக்ச குடும்பத்தை சார்ந்தவர்கள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டு இருப்பார்கள்.

Loading...

அவர்கள் தேர்தலில் போட்டியிடும் நிலை தடுக்கப்பட்டிருக்கும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அந்த பன்னாட்டுப் புலனாய்வு விசாரணை நடைபெறவில்லை. அவர்கள் ஒப்புக் கொண்ட உள்நாட்டு விசாரணையும் கூட நடைபெறவில்லை. இதனால் ராஜபக்ச குடும்பம் மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் அமரும் அவலம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சமூகத்திற்கு நீதி கிடைக்க வாய்ப்பில்லை என்ற ஒரு நிலை உருவாகியுள்ளது. அவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது. இதுவேதனைக்குரிய ஒரு விஷயம்.

மோடி அரசு ஒரு கார்ப்பரேட் அரசாக செயல்பட்டு வருகிறது. எனவே பொதுத்துறை நிறுவனங்களை இந்த ஐந்து ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக தனியார் துறை நிறுவனங்களாக மாற்றும் முயற்சியில் தான் மோடி அரசு பொருளாதார நடவடிக்கை எடுத்து வருகிறது. இது கவலைக்குரிய ஒன்றாகும்’ என்று தெரிவித்தார்.

Also see:


 
First published: November 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
Listen to the latest songs, only on JioSaavn.com