முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நடிகர் விவேக் இறப்பில் திருமாவளவன் அரசியல் செய்கிறார் - எல்.முருகன் குற்றச்சாட்டு

நடிகர் விவேக் இறப்பில் திருமாவளவன் அரசியல் செய்கிறார் - எல்.முருகன் குற்றச்சாட்டு

எல்.முருகன்

எல்.முருகன்

எதிர்கட்சி தலைவர் பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வதாகவும், கொரோனா காலங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வழங்காமல் கொடைக்கானலில் தங்கி இருப்பதாக குற்றம்சாட்டினார்.

  • 1-MIN READ
  • Last Updated :

நடிகர் விவேக் இறப்பில் திருமாவளவன் அரசியல் செய்வதாக பல்லடத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில்  பாஜக மாநில தலைவர் எல். முருகன் குற்றச்சாட்டு தெரிவித்தார் மேலும் எதிர்கட்சி தலைவர் பொறுப்பில்லாமல் கொடைக்காணலில் தங்கி இருப்பதாகவும்  விமர்சித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாரதிய ஜனதா கட்சியில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில்  நடைபெற்றது. இதனை அடுத்து  செய்தியாளர்களை சந்தித்த முருகன், தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதாகவும், எனவே பொதுமக்கள் கொரோனா முதலாம் அலையை கட்டுப்படுத்தியது போல் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த ஒற்றுமையுடன் ஒத்துழைப்பு கொடுத்து அரசின் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மேலும் நடிகர் விவேக் மரணம் துக்கத்தை ஏற்படுத்துவதாகவும், சமூக சிந்தனையாளரான நடிகர் விவேக்கின் இழப்பு தமிழ்நாட்டிற்கே பேரிழப்பு எனவும் கூறினார். ஆனால் நடிகர் விவேக்கின் மரணத்தை திருமாவளவன் அரசியல் செய்வதாகவும், அவரே  தடுப்பூசியை இரண்டு முறை போட்டுகொண்டதாகவும் எனவே, பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் பொறுப்போடு நடந்துகொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டார்.  மேலும் விவேக்கின் மரணம் குறித்த சர்ச்சைக்குறிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில்  பரவி வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த முருகன், நாடு முழுவதும் கோடிக்கணக்கானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு வருவதாகவும், நடிகர் விவேக் தடுப்பூசி போட்ட அன்றைய தினம் 800 பேரும் நாட்டின் பிரதமர் மற்றும் முக்கிய தலைவர்கள்  தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும் எனவே பொய் பிரச்சாரங்கள் செய்யவேண்டாம் எனவும் கூறினார்.

எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கொடைக்கானலில் தங்கி இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த முருகன், எதிர்கட்சி தலைவர் பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வதாகவும், கொரோனா காலங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வழங்காமல் கொடைக்கானலில் தங்கி இருப்பதாக குற்றம்சாட்டினார். மேலும் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில் பாதை, தொழில் பேட்டை மற்றும் மகளிர் கலை கல்லூரி அமைக்கப்படும் என உறுதி அளித்தார். இந்நிகழ்சியில் கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

திருப்பூர் செய்தியாளர் பாலாஜி

First published:

Tags: L Murugan, Thol. Thirumavalavan