• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • உள்ளாட்சித் தேர்தலில் மேயர், மாவட்டத் தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் வேண்டும் - திருமாவளவன் கோரிக்கை

உள்ளாட்சித் தேர்தலில் மேயர், மாவட்டத் தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் வேண்டும் - திருமாவளவன் கோரிக்கை

திருமாவளவன்

திருமாவளவன்

உள்ளாட்சித் தேர்தலில் மேயர் மற்றும் தலைவர் பதவிகளுக்கு நேரடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை பேசிய அவர், ‘தமிழகத்தில் இதர பிற்படுத்தப்பட்ட (OBC)வகுப்பினர் பட்டியலில் இடபெற்றுள்ள சாதியின் பெயர்கள் மத்திய அரசின் பட்டியலில் இடம்பெறாமல் உள்ளது.

    எனவே அவர்களால் மத்திய அரசின் கல்லூரிகளில் இடஒதுக்கீடு மூலம் சேர முடியாமல் உள்ளது என்றும் எனவே அந்த சாதிகள் பெயர் மத்திய அரசு பட்டியலில் இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார். மேலும் உள்ளாட்சித் தேர்தலில் நகராட்சிகளில் மேயர் பதவிகள் கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுக்கும் முறையை மாற்ற வேண்டும் என்றும் மேயர் மற்றும் மாவட்டத் தலைவர்கள் பதவியும் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

    ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதை பெயர் மாற்றியது அநாகரிகமானது. ராஜிவ் காந்தி பெயரிலேயே தொடர்ந்து விருது வழங்கப்பட வேண்டும். இந்த அநாகரிக அரசியலை கைவிட வேண்டும். மேலும் மேகதாது அணை கட்டுவதை கண்டித்து தமிழக பாஜக போராடுவது குறித்து கூறிய அவர் பாஜகவினர் இரட்டை வேடம் அல்ல பல விதமான வேடங்களை போட கூடியவர்கள் என்றும் பாஜகவில் உள்ள ஒவ்வொரு நபர்களும் ஒரு கருத்தை கூறுவார்கள் என்றும் மாநிலத்திற்கு ஏற்றவாறு கருத்துகளை கூறுவார்கள். அதனை தமிழக மக்கள் நம்பமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஒலிம்பிக் இந்திய ஹாக்கி அணியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த வந்தானாவின் இல்லம் முன் நடத்தப்பட்ட சம்பவம் விளையாட்டிலும் சாதி அரசியல் எந்த அளவிற்கு பரவியுள்ளது என்பதைக் காட்டுகிறது. உலக அரங்கில் இது இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச ஹாக்கி அமைப்பும், ஒலிம்பிக் கமிட்டியும் இதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: