• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழருவி மணியனின் எத்தனையோ கனவுகளில் இதுவும் ஒன்று! ரஜினி-பாமக கூட்டணி குறித்து திருமாவளவன்

தமிழருவி மணியனின் எத்தனையோ கனவுகளில் இதுவும் ஒன்று! ரஜினி-பாமக கூட்டணி குறித்து திருமாவளவன்

திருமாவளவன்

திருமாவளவன்

  • Share this:
    டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த முறம்பு பகுதியில் தேவநேயப் பாவாணரின் 119 வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர்,  ரஜினிகாந்த் தொடங்கும் கட்சியுடன் பா.ம.க கூட்டணி அமைக்கும் என்ற தமிழருவி மணியனின் கருத்து அவருடைய எத்தனையோ கனவுகளில் இதுவும் ஒன்றாக தெரிவதாக குறிப்பிட்டார்.

    விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே முறம்பு பகுதியில் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் 119 வது பிறந்த நாள் விழாவில் விடுதலை சிறுத்தை கட்சித் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

    மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மதமாற்ற சட்டத்தை கொண்டுவந்தபோது அதற்கு எதிர்ப்பின் அடையாளமாக தமிழகத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் தமிழ் பெயர் சூட்டும் விழா நடத்தினோம் என பேசினார்

    அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘பாவாணரின் கருத்துக்களை மாணவர்கள் அறிந்து கொள்ளும் விதமாக கல்லூரி மற்றும் பள்ளிகளில் பாடப்புத்தகங்களில் பாவாணரின் கருத்துக்களை பாடமாக இடம்பெற செய்ய வேண்டும்.

    டி.என்பி.எஸ்.சி தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. அந்த முறைகேட்டில் யார் சம்பந்தப்பட்டு இருந்தாலும் அமைச்சர்களாக இருந்தாலும் வேறு பின்னனி உள்ளவர்களாக இருந்தாலும் தமிழக அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படிப்பட்ட தேர்வு ஆணையங்களில முறைகேடு நடந்தால் நீதி கிடைக்காது. இது சமுகத்தில் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும் எனக் கூறினார்.

    வருகிற 22 ஆம் தேதி திருச்சியில் CAA, NPR, NRC ஆகியவற்றை எதிர்த்து தேசம் காப்போம் பேரணி நடத்துகிறோம். அதில் கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

    தமிழருவி மணியன் ரஜினிகாந்த் தலைமையில் பாமக இணைந்து ஆட்சி அமைக்கும் என்று கூறி வருவது அவர் எத்தனையோ கனவுகள் கண்டு வருகிறார். அவருடைய கனவு இதுவரை பலித்ததில்லை. இப்போதும் அவரது கனவை வெளிபடுத்தி இருக்கிறார் பொருத்து இருந்து பார்ப்போம்’ என்று தெரிவித்தார்.

    Also see:



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: