நடராஜர் கோயிலில் நடைபெற்றத் திருமணம்! வெள்ளை அறிக்கை கேட்கும் திருமாவளவன்

கொத்தட்டை கிராமத்தில் தலித் மக்களுக்கான நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது கண்டிக்கத்தக்கது. இதை அரசு அதிகாரிகள் மீட்க வேண்டும்.

நடராஜர் கோயிலில் நடைபெற்றத் திருமணம்! வெள்ளை அறிக்கை கேட்கும் திருமாவளவன்
திருமாவளவன், எம்பி.
  • News18
  • Last Updated: October 1, 2019, 10:26 PM IST
  • Share this:
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் ஆடம்பர திருமணம் நடந்த விவகாரம் குறித்து, அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

சிதம்பரம் நகரில் உள்ள தில்லையம்மன் ஒடை, ஞானப்பிரகாசம் குளம், நாகேசரிக்குளம், ஓமக்குளம் உள்ளிட்ட இடங்களில் நீர்வழி ஆக்கிரமிப்புகள் எனக்கூறி நீதிமன்ற உத்தரவுப்படி சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் படிப்படியாக இடிக்கப்பட்டது. இந்த இடங்களுக்கு மாற்று இடம் வழங்காததைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

சிதம்பரம் காந்தி சிலை அருகில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்பியுமான திருமாவளவன் பங்கேற்று கண்டன முழக்கம் எழுப்பினார். இடிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்றாக உடனடியாக மாற்று இடம் வழங்கப்பட வேண்டுமென அவர் கண்டன முழக்கம் எழுப்பினர்.


அப்போது சிதம்பரம் நடராஜர் கோயிலில் சர்ச்சைக்குரிய வகையில் நடந்த திருமண விவகாரம் குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் திருமாவளவன் கண்டன முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘சிதம்பரம் நகரில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த மக்களை நீதிமன்ற உத்தரவைக் காட்டி 500-க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்துள்ளனர். அவர்களுக்கு மாற்று இடம் தராதது அதிர்ச்சியளிக்கிறது. இதைக் கண்டித்து இன்று சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. கொத்தட்டை கிராமத்தில் தலித் மக்களுக்கான நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது கண்டிக்கத்தக்கது. இதை அரசு அதிகாரிகள் மீட்க வேண்டும். சிதம்பரம் பகுதியில் உள்ள பாசன, கிளை வாய்க்கால்களை தூர் வாராததால் ஆற்றில் வரும் உபரி நீர் நேராக கடலில் சென்று வீணாகிறது.

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆலயத்தில் நடைபெற்ற விதிமீறல் திருமணம் கண்டிக்கத்தக்கது. இந்த திருமணம் நடந்ததற்கு பின்னணி என்ன? அதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை எல்லாம் முழுமையாக கண்டறிய வேண்டும். இதுகுறித்து தமிழக அரசு ஒரு உரிய விசாரணை நடத்தி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்ததும் தமிழ்மொழி தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது’ என்று தெரிவித்தார்.Also see:

First published: October 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading