• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பார்வையிழந்த நால்வருக்கு பயன்படும் - கண்களைத் தானம் செய்த திருமாவளவன்

பார்வையிழந்த நால்வருக்கு பயன்படும் - கண்களைத் தானம் செய்த திருமாவளவன்

திருமாவளவன்

திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கண்தானம் செய்துள்ளார்.

  • Share this:
    இந்தியாவில் கருவிழி பாதிப்பால் முழுவதும் பார்வையிழந்தவர்கள் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் உள்ளனர். ஆண்டுதோறும் சுமார் 20,000 பேர்வரை கருவிழி பாதிப்பு ஏற்பட்டு பார்வையிழப்பு ஏற்படுகிறது.

    இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் அரசு, அரசுசாராக் கண் வங்கிகள் மூலம் 50,000 முதல் 55,000 கண்கள் தானமாகப் பெறப்படுகின்றன. தேவையில் ஐம்பது சதவீதக் கண்களை மட்டுமே தானமாகப் பெற முடிகிறது. கண் தானம் பற்றிய விழிப்புணர்வு கிராமப்புற மக்களிடையே மட்டுமின்றி, நகர்ப்புற மக்களிடையேயும் குறைவாக உள்ளதே இதற்குக் காரணம்.

    இறந்தவரின் குடும்பத்தினருடைய விருப்பத்தின் பேரிலோ அல்லது ஒருவர் வாழும் காலத்தில் விருப்பம் தெரிவித்திருந்தாலோ இறந்த ஒருவரின் கண்களை எடுத்துப் பார்வையற்றவருக்குப் பொருத்த அனுமதிப்பதே கண் தானம். கண்களைத் தானம் செய்ய விருப்பம் இருந்தால், அதற்கான விருப்பப் படிவத்தை அருகில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கண் வங்கியில் பெற்றுப் பதிவு செய்துகொள்ளளலாம்.


    கண் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஆக.25 முதல் செப்.8ம் தேதி வரை தேசிய கண் தான இருவார விழா கொண்டாடப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்தநிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவரது கண்களை தானம் செய்தார். இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், ‘ஆக25 முதல் செப்09 வரை இருவார தேசிய கண்தானம் நடைபெறுவதையொட்டி அரவிந்த கண் மருத்துவமனை நிர்வாகத்தின் முன்னிலையில் எனது இருவிழிகளையும் (கருவிழிகள்) செப் 01 அன்று கொடையளித்தேன். நமது மறைவுக்குப் பின்னர் நமது கருவிழிகள் பார்வையிழந்த நால்வருக்குப் பயன்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: