செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் கணவனைக் கொன்ற பள்ளி ஆசிரியை.. நடந்தது என்ன?

மதுரை, திருமங்கலத்தில் கணவரின் செக்ஸ் டார்ச்சர் தாங்க முடியாமல், அவரின் ஆணுறுப்பில் தாக்கி மனைவியே கொலை செய்ததாக பகீர் புகார் எழுந்துள்ளது.

செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் கணவனைக் கொன்ற பள்ளி ஆசிரியை.. நடந்தது என்ன?
மாதிரி படம்
  • Share this:
மதுரை, திருமங்கலம் மாயாண்டி நகரைச் சேர்ந்தவர் 34 வயதான சுந்தர் என்ற சுதீர். இவருடைய மனைவி அருள்செல்வி. திருமணமாகி 6 ஆண்டுகள் ஆன நிலையில், இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். சுந்தர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார்

மனைவி அருள்செல்வி திருமங்கலம் அருகே கீழ்செம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். சுந்தர் மது போதைக்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. போதையில் மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபடுவார் எனவும் தெரிகிறது. சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் சுந்தர் கட்டிலில் இருந்து கீழே விழுந்து மயங்கிவிட்டதாகக்கூறி திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு மனைவி கொண்டு சென்றுள்ளார்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சுந்தர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும், சுந்தர் உயிர் தடத்தில் ரத்தக்கட்டு இருந்ததால் இறப்பில் சந்தேகம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னரே உடல் ஒப்படைக்கப்படும் என உறவினர்களிடம் போலீசார் தெரிவித்தனர்.


மேலும், திருமங்கலம் டிஎஸ்பி அருண் தலைமையிலான போலீசார் மனைவி அருள்செல்வியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சுந்தர், மனைவி அருள்செல்விக்கு அடிக்கடி செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்ததாகவும், அதேபோல் வெள்ளிக்கிழமை இரவும் டார்ச்சர் கொடுத்ததாக தெரிகிறது.இதனால் ஏற்பட்ட தகராறில் மனைவியே கணவரின் ஆணுறுப்பில் தாக்கியதில் சுந்தர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மேலும் சுந்தர் கொலையில் உண்மையில் நடந்தது என்ன? வேறு யாரும் அருள்செல்விக்கு உதவினார்களா என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

 
First published: August 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading