திருமங்கலம் - கொல்லம் நான்கு வழிச்சாலை திட்டத்தை மாற்று பாதையில் அமைக்ககோரி போராட்டம்
திருமங்கலம் - கொல்லம் நான்கு வழிச்சாலை திட்டத்தை மாற்று பாதையில் அமைக்ககோரி போராட்டம்
திருமங்கலம் - கொல்லம் நான்கு வழிச்சாலை போராட்டம்
Tenkasi District | போராட்டம் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசியில் திருமங்கலம் - கொல்லம் நான்கு வழிச்சாலை திட்டத்தை மாற்று பாதையில் அமைக்ககோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 200க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதன் காரணமாக ஆட்சியர் அலுவலகத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து தென்காசி மாவட்டம் வழியாக கொல்லம் வரை நான்கு வழிசாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இத்திட்டத்தால் தென்காசி வழியே புளியங்குடி, புளியரை, வடகரை ஆகிய பகுதிகளில் விவசாய நிலங்கள், திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் பாதிக்கப்படுகின்றன எனவே மாற்று பாதையில் அமைக்கக்கோரி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று தென்காசி மாவட்ட புதிய பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொது செயளாலர் சண்முகம் தலைமையில் நான்கு வழிச்சாலை புதிய திட்டத்தை பொதுமக்களிடம் எவ்வித விளக்கமும் கேட்டறியாமல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனை கண்டித்து தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் புதிய பேருந்துநிலையத்தில் இருந்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த போராட்டம் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ச.செந்தில், செய்தியாளர்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.