தில்லை நடராசர் கோயிலை வணிகமயமாக்க முயற்சியா? - ராமதாஸ் கண்டனம்

News18 Tamil
Updated: September 13, 2019, 3:40 PM IST
தில்லை நடராசர் கோயிலை வணிகமயமாக்க முயற்சியா? - ராமதாஸ் கண்டனம்
பாமக நிறுவனர் ராமதாஸ்
News18 Tamil
Updated: September 13, 2019, 3:40 PM IST
நடராஜர் கோயில் நிர்வாகத்தை மீட்டெடுத்து சரியானவர்களின் கைகளில் ஒப்படைக்க தமிழக அரசு தயங்கக்கூடாது என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உலகப் புகழ்பெற்ற திருக்கோயில்களில் ஒன்றாக போற்றப்படுவதும், பிச்சாவரம் சோழர்களால் காலம் காலமாக நிர்வகிக்கப்பட்டு வந்ததுமான சிதம்பரம் நடராசர் கோயிலில் மிக மோசமான அத்துமீறல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.  புனிதம் மிக்க சிதம்பரம் நடராசர் கோயிலை வணிகமயமாக்கும் நோக்கத்துடன் நடராசர் கோயில் நிர்வாகம் மேற்கொண்ட அத்துமீறல்கள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


சிதம்பரம் நடராசர் கோயிலின் பல்லாயிரமாண்டு கால வரலாற்றில் ஆயிரங்கால் மண்டபத்தில் நிகழ்ச்சிகளை நடத்த பல முயற்சிகள் நடந்த போதிலும் அவை எதுவும் வெற்றி பெற்றதில்லை என்றும், இத்தகைய வரலாறு கொண்ட ஆயிரங்கால் மண்டபத்தில் பணம் கிடைக்கிறது என்பதற்காக திருமணம் நடத்த அனுமதிப்பது நடராசர் கோயிலை வணிகமயமாக்கும் செயல் என்று ராமதாஸ் சாடியுள்ளார்.

மேலும், சிதம்பரம் நடராசர் கோயிலில் நிகழ்த்தப்பட்ட அத்துமீறல்கள் குறித்து சுருக்கமாக கூற வேண்டுமானால் பணத்தின் முன் புனிதமும், பாரம்பரியமும் வீழ்த்தப்பட்டிருக்கின்றன என்று தான் குறிப்பிட வேண்டும் என ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார் .

நடராசர் கோவில் நிர்வாகம் தவறானவர்களின் கைகளில் சிக்கித் தவிக்கிறது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணத்தைக் கூற முடியாது என்றும், இதற்கான ஒரே பரிகாரம் கோயில் நிர்வாகத்தை மீட்டெடுத்து சரியானவர்களின் கைகளில் ஒப்படைப்பது மட்டும் தான். அதை செய்ய தமிழக அரசு தயங்கக்கூடாது என்றும் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Loading...

”எனவே, சிதம்பரம் நடராசர் கோயிலில் நிகழ்த்தப்பட்ட அத்துமீறல் பற்றி விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும். அதுமட்டுமின்றி, காலம்காலமாக பிச்சாரவரம் சோழர்கள் நிர்வாகத்தில் சிதம்பரம் நடராசர் கோயில் புகழ் பெற்று விளங்கியது என்பதால், அக்கோயிலை தமிழக அரசு கையகப்படுத்தி, அதை நிர்வகிக்க அமைக்கப்படும் அறங்காவலர் குழுவில் பிச்சாவரம் சோழர்களை சேர்க்க வேண்டும்” என்றும் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Read Also: சிதம்பரம் நடராஜர் கோயிலில் பட்டாசு அதிபர் வீட்டு திருமணம்: சர்ச்சையில் கோயில் நிர்வாகம்

Watch Also:
First published: September 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...