திருட வந்த வீட்டில் நகை இல்லாததால் ஆத்திரமடைந்து ஹோம் தியேட்டரை திருடிய  திருடர்கள்

மாதிரி படம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், வீடு புகுந்து திருட வந்த மர்ம நபர்கள், நகைகள் இல்லாததால் ஆத்திரத்தில் ஹோம் தியேட்டரை திருடிச் சென்றுள்ளனர். நடந்தது என்ன? 

 • Share this:
  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகா நகர் 5வது தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன்; தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த மாதம் 24ம் தேதி கோவை சென்றார். சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக, செவ்வாய்க்கிழமை பிற்பகலில் குடும்பத்தினருடன் ஊருக்கு திரும்பி வந்துள்ளார். வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது. உடைகள் வீடு முழுவதும் விசிறியடிக்கப் பட்டிருந்தன.

  பீரோவில் நகைகள், பணம் இல்லாததால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள், 28000 ரூபாய் மதிப்புள்ள ஹோம் தியேட்டரை மட்டும் திருடித் தப்பியுள்ளது தெரியவந்தது. மேலும், திருட்டுத் தடயங்கள் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது. சமையல் அறையில் இருந்த கேஸ் திறந்து விடப்பட்டிருந்தது.

  மேலும் படிக்க... வாக்குப் பதிவை வீடியோ எடுத்த இளைஞர்கள்.. கட்சிகளிடம் பணம் வாங்கியது உண்மையா ?

  நகை மற்றும் பணம் ஆகியவற்றை பாலமுருகன் வங்கி லாக்கரில் வைத்திருந்த காரணத்தினால் அவைகள் தப்பிவிட்டன. இது குறித்து பாலமுருகன் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: