ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தாம்பரத்தில் கொள்ளையடித்து மகாபலிபுரத்தில் ரூம் போட்ட கொள்ளையர்கள் - பெட்ரோல் பங்க் திருட்டு சம்பவத்தில் மூவர் கைது

தாம்பரத்தில் கொள்ளையடித்து மகாபலிபுரத்தில் ரூம் போட்ட கொள்ளையர்கள் - பெட்ரோல் பங்க் திருட்டு சம்பவத்தில் மூவர் கைது

கொள்ளையர்கள் கைது

கொள்ளையர்கள் கைது

Tambaram : தாம்பரம் அருகே பெட்ரோல் பங்க் மற்றும் பால் கடையில் கொள்ளையடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் லட்சுமி நகர் பகுதியில் தாமோதரன் என்பவர் பெட்ரோல் பங்க்  நடத்தி வருகிறார்.

ஊழியர்கள் வழக்கம்போல, இரவு 10 மணிக்கு பெட்ரோல் பங்க் மூடிவிட்டு சென்றனர். பின்னர் காலையில் சுமார் 5 மணி அளவில் பெட்ரோல் பங்கை திறப்பதற்காக வந்து பார்த்த போது மேனேஜர் அறையின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் வைத்திருந்த10,000 ரூபாய் மற்றும் விலை உயர்ந்த செல்போன் காணாமல் போனது தெரியவந்தது. அதுமட்டுமின்றி பெட்ரோல் பங்க் அருகே ஜெயபிரகாஷ் என்பவர் பால் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.3,000 ரொக்கப்பணம் மற்றும் நெய் டப்பாக்கள் காணாமல் போயிருந்ததும் தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து பெருங்களத்தூர் பீர்க்கங்கரணை குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த, புகாரின் அடிப்படையில் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்ற போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, கௌபார் மூலமாக ஷட்டரின் பூட்டை உடைத்து கொள்ளையன் கொள்ளை அடித்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.

அந்த காட்சிகளை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் இருந்து சுமார் 73 கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்திய நிலையில், மகாபலிபுரத்தில் தனியார் ஓட்டலில் கொள்ளையன் ரூம் எடுத்து தங்கி இருந்தது தெரியவந்தது.

அங்கே சென்ற காவலர்கள், அங்கிருந்த மூன்று பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த மதன் (வயது 21) என்கின்ற லொட்டை மதன், திருவல்லிக்கேணியை சேர்ந்த கௌதம் குமார் (வயது18), சென்ட்ரல் பல்லவன் சாலையைச் சேர்ந்த 17வயது சிறுவன் ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில்,  திருவள்ளூரில் இருசக்கர வாகனத்தை திருடி கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி கொள்ளையடித்த பணத்தில் மகாபலிபுரத்தில் ரூம் எடுத்து மதுபோதையில் வாழ்க்கையை என்ஜாய் செய்ததாக குற்றவாளிகள் பகீர் வாக்குமூலம் அளித்தனர்.

Must Read : வரதட்சணை கேட்டு காதல் கணவன் கொடுமை -இரண்டே மாதத்தில் கசந்த 7 ஆண்டு காதல்.. இளம்பெண் தற்கொலை

அவர்களிடம் இருந்து விலை உயர்ந்த ஒரு செல்போன் இருசக்கர வாகனம் மற்றும் 4 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிபதி முன் ஆஜர் படுத்தி இரண்டு பேரை புழல் சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

செய்தியாளர் - சுரேஷ்.

First published:

Tags: Arrested, Crime News, Robbery, Tambaram