பிரியாணி சாப்பிட ஆசைப்பட்டு ஒன்றரை லட்ச ரூபாயை பறிகொடுத்த அப்பாவி மனிதர்!

சிசிடிவி காட்சி

பிரியாணி சாப்பிட்டுவிட்டு திரும்பி வந்து வாகனத்தை பார்த்தபோது சீட்டுக்கு அடியில் வைத்திருந்த பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

 • Share this:
  பிரியாணிக்கு ஆசைப்பட்ட நபரிடம் இருந்து ரூ.1.5 லட்ச ரூபாயை திருடிச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

  சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி(32) பால் மற்றும் பேப்பர் போடும் வேலை செய்து வருகிறார்.

  கடந்த வாரம் பாலவாக்கம் அண்ணாசாலை பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் 1.5 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு அவருடைய இருசக்கர வாகனத்தின் சீட்டிற்கு அடியில் வைத்துக் கொண்டு வீடு திரும்புவதற்காக புறப்பட்டிருக்கிறார்.

  Also read: வாடகை செலுத்தியும் வங்கி லாக்கரை நீண்ட காலம் இயக்காமல் இருந்தால் என்ன ஆகும்? – ரிசர்வ் வங்கி புது விதிமுறைகள் அமல்!

  அப்பொழுது பிரியாணி சாப்பிட ஆசைப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடையில் பிரியாணி சாப்பிட இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

  பிரியாணி சாப்பிட்டுவிட்டு திரும்பி வந்து வாகனத்தை பார்த்தபோது சீட்டுக்கு அடியில் வைத்திருந்த பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

  இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

  Also read:   94,000 கிமீ வேகத்தில் பூமியை நெருங்கிய ஆபத்தான சிறுகோள்!

  சிசிடிவி காட்சிகளை பார்த்த போலீசார் சம்பவத்தில் ஈடுபட்டது பழைய குற்றவாளி என்பதை கண்டறிந்தனர். அதனடிப்படையில் தனிப்படை போலீசார் வழி நெடுகிலும் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வில்லிவாக்கம் சென்னை ராஜமங்கலத்தை சேர்ந்த சிட்டிபாபு(வயது 42) என்பவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

  விசாரணையில் இவர் மீது வங்கியில் இருந்து பணம் எடுத்து வருபவர்களை பின் தொடர்ந்து அவர்களின் கவனத்தை திசை திருப்பி பணத்தை திருடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது என்பதும் பல்வேறு காவல் நிலையங்களில் இவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து 1.5 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த நீலாங்கரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  வினோத்கண்ணன். செய்தியாளர் - சென்னை
  Published by:Arun
  First published: