திருச்சி லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடித்த கொள்ளையன் கைது?

திருச்சி லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடித்த கொள்ளையன் கைது?

லலிதா நகைக்கடையினுள் கொள்ளையடிக்குக் கொள்ளையர்கள்

  • News18
  • Last Updated :
  • Share this:
திருவாரூரில் வாகன சோதனையின் போது லலிதா ஜுவல்லரி நகைக்கடையின் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மணிகண்டனன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி லலிதா ஜூவல்லரி, 3 தளங்களுடன் 5 ஆண்டுகளுக்கும் மேலாக சத்திரம் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம் போல் பணிகளை முடித்து விட்டு ஊழியர்கள் புறப்பட்டுச் சென்ற நிலையில், இரவில் 4 காவலாளிகள் கடைக்கு வெளியே பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

காலையில் மீண்டும் கடையை திறந்து பார்த்த போது, தரைதளத்தில் இருந்த நகைகள் அனைத்தும் மாயமாகி இருப்பது கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையின்போது, 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்தநிலையில், திருவாருரில் காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, மணிகண்டன் என்பவரிடம் லலிதா ஜூவல்லரி  முத்திரையுடன் கூடிய நகைகள் இருந்துள்ளன. எனவே, அவரிடம் திருச்சியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளா, கொள்ளையில் ஈடுபட்ட நபரா என்ற கோணத்தில் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.  அவரிடமிருந்து நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Also see:

Published by:Karthick S
First published: