வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள், ஆனால் நிறைவேற்ற மாட்டார்கள்: அதிமுக மீது துரைமுருகன் தாக்கு

துரைமுருகன்

தி.மு.க. அறிவித்த விவசாய கடன் தள்ளுபடி சாத்தியமில்லை என அ.தி.மு.க.வினர் கூறுகின்றனர். ஆனால் தி.மு.க. ஆட்சியிலிருந்த போது விவசாய கடனை தள்ளுபடி செய்து நிரூபித்துள்ளோம்.

 • Share this:
  அ.தி.மு.க.வினர் தேர்தலுக்காக அதிக வாக்குறுதிகளை அள்ளி விடுகின்றனர். ஆனால் எதையும் அவர்கள் நிறைவேற்ற போவதில்லை, என தி.மு.க. பொதுச்செயலர் துரைமுருகன் கூறினார்.

  வேலுாரில் அவர் கூறியதாவது, “தபால் துறையில் ஆட்களை தேர்வு செய்ய ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் தேர்வு நடத்துகின்றனர். சென்ற முறை தமிழில் தேர்வு நடத்தப்பட்டது.

  தற்போது ஹிந்தி திணிப்பு சமஸ்கிருதம் என்பதில் பா.ஜ. தீவிரமாக உள்ளது. அண்ணா பல்கலை கழக துணை வேந்தர் சுரப்பாவின் ஊழல் குறித்து விசாரிக்க கமிஷன் அமைக்கப்பட்ட நிலையில் அவரது பதவியை நீட்டித்திருப்பது கவர்னருக்கு அழகல்ல.

  தி.மு.க. அறிவித்த விவசாய கடன் தள்ளுபடி சாத்தியமில்லை என அ.தி.மு.க.வினர் கூறுகின்றனர். ஆனால் தி.மு.க. ஆட்சியிலிருந்த போது விவசாய கடனை தள்ளுபடி செய்து நிரூபித்துள்ளோம்.இவ்வாறு கூறினார்.
  Published by:Muthukumar
  First published: