Home /News /tamil-nadu /

கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு காரணம் இவர்கள் தான்.. அன்புமணி ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு காரணம் இவர்கள் தான்.. அன்புமணி ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

இப்ப இருக்கும் அரசியல் சூழ்நிலையில் ஒரு வெற்றிடம் உள்ளது. அந்த வெற்றிடத்தை பாட்டாளி மக்கள் கட்சி நிச்சயம் நிரப்பும். பாட்டாளி 2.0, பாட்டாளி மாடல் என்ற வித்தியாசமான முறையில் மக்களை சந்திக்க இருக்கிறோம்.

    சின்ன சேலம் கள்ளக்குறுச்சியில் 12ம்வகுப்பு பள்ளி மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும். அப்பொழுதுதான் அதற்கு தீர்வு கிடைக்கும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்ற அன்புமணி ராமதாஸ் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, பனையூர் அதேபோல் பழைய மகாபலிபுரம் சாலை சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, காரப்பாக்கம், கண்ணகிநகர், பெருங்குடி கல்லுக்குட்டை உள்ளிட்ட பகுதியில் கழக கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் மற்றும் மரக்கன்றுகளை அன்புமணி ராமதாஸ் வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து, சோழிங்கநல்லூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்புமணி ராமதாஸ், 56 ஆண்டு காலம் தமிழ்நாட்டில் இரு கட்சிகளான அதிமுக, திமுக ஆட்சி செய்து மக்கள் மனதில் ஒரு தேக்க நிலையை ஏற்படுத்தி உள்ளது. அடுத்தது ஒரு வித்தியாசமான புதுமையான கட்சிக்கு வாய்ப்பு கொடுப்போம் என்று மக்கள் மனதில் ஆழமான கருத்துள்ளது. அடுத்தது வித்தியாசமான கட்சியானது பாட்டாளி மக்கள் கட்சி. 2026-ம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் கூட்டணி கட்சியை அமைப்போம்.

    இப்ப இருக்கும் அரசியல் சூழ்நிலையில் ஒரு வெற்றிடம் உள்ளது. அந்த வெற்றிடத்தை பாட்டாளி மக்கள் கட்சி நிச்சயம் நிரப்பும். பாட்டாளி 2.0, பாட்டாளி மாடல் என்ற வித்தியாசமான முறையில் மக்களை சந்திக்க இருக்கிறோம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சின்னசேலம் கள்ளக்குறிச்சியில் 12-ம் வகுப்பு பள்ளி மாணவி மர்மமான முறையில் இறந்துள்ளார். பெண்ணின் பெற்றோர்கள், உறவினர்கள், ஊர்மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இதற்கு முழு விசாரணை நடக்க வேண்டும் என்று அன்றே நாங்கள் சொல்லியிருந்தோம். ஆனால் அரசு நடவடிக்கை எடுக்காததால் இன்று மிகப்பெரிய கலவரம் வெடித்துள்ளது.

    இந்த கலவரத்திற்கு காரணம் காவல்துறை தான். நடவடிக்கை எடுத்திருந்தால் பரவாயில்லை ஒருதலை பட்சமாக பள்ளிக்கு சாதகமாக காவல்துறை செயல்பட்டது. இதற்கு சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் அப்பொழுது தான் அதற்கான தீர்வு கிடைக்கும். இந்தப் பள்ளியில் இது முதல் சம்பவம் இல்லை இதற்கு முன்பு பல மாணவ - மாணவிகள் மர்மமான முறையில் இறந்துள்ளனர். தமிழக அரசு சிபிசிஐடி விசாரணை கொண்டுவரவில்லை என்றால் சிபிஐ விசாரணை கொண்டுவர வேண்டும். இது சம்பந்தமாக பாட்டாளி மக்கள் கட்சி மிகப்பெரிய போராட்டம் நடத்தும் என தெரிவித்தார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Anbumani ramadoss, Kallakurichi

    அடுத்த செய்தி