ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 114-வது ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை விழா அக்.28 -ல் தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று முன்தினம் யாகசாலை பூஜை மற்றும் லட்சார்ச்சனையுடன் ஆன்மிக விழா தொடங்கியது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114 வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அவரது முழு வெண்கல திருவுருவ சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் தமிழக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, பசும்பொன்னில் இன்று தேவர் நினைவிடத்தில் பல்வேறு கட்சித் தலைவர்களும் நேரில் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும், இத்தாலி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை நினைவு கூர்ந்துள்ளார்.
காவல்துறை வாகனத்தில் அத்துமீறும் இளைஞர்கள். கண்டிக்கப்பட வேண்டும் #ThevarJayanthi @rameshibn @Mugilan__C @PrakashPandianP @PramodMadhav6 pic.twitter.com/Fnu42ybO0N
— Rajesh (@Rajeshjourn) October 30, 2021
இந்நிலையில், கமுதியில் குருபூஜை விழாவில் கலந்துகொள்ள சென்ற இளைஞர்கள் சிலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை வாகனத்தின் மீது ஏறி நின்று குத்தாட்டம் போட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் கூறும்போது, காவல்துறை வாகனத்தின் மீது ஏறி நின்று இளைஞர்கள் ஆடிய சம்பவம் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. விழா முடிந்ததும், புகார் பெற்று அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.