ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலீவீனமாக இருப்பதை எப்படி கண்டறிவது..? இந்த அறிகுறிகளை கவனியுங்கள்

உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலீவீனமாக இருப்பதை எப்படி கண்டறிவது..? இந்த அறிகுறிகளை கவனியுங்கள்

வைரஸை எதிர்த்து போராட உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டாலும் கூட இயற்கையாகவே நமது உடலின் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருப்பது இந்த பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

வைரஸை எதிர்த்து போராட உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டாலும் கூட இயற்கையாகவே நமது உடலின் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருப்பது இந்த பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

வைரஸை எதிர்த்து போராட உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டாலும் கூட இயற்கையாகவே நமது உடலின் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருப்பது இந்த பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

 • 2 minute read
 • Last Updated :

  உலகில் இரண்டாண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் கோவிட்-19 பெருந்தொற்று மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. டெல்டா வேரியன்ட்டின் தாக்கமே இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படாத நிலையில், அதை விட 5 மடங்கு வேகமாக பரவ கூடிய ஓமைக்ரான் வேரியன்ட் நாட்டில் நுழைந்திருப்பது மக்களை அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது.

  ஏற்கனவே தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஜனவரி 10-ஆம் தேதி முதல் 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் மருத்துவர்களின் அறிவுரைப்படி மூன்றாவது டோஸ் அதாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.

  வைரஸை எதிர்த்து போராட உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டாலும் கூட இயற்கையாகவே நமது உடலின் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருப்பது இந்த பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே கோவிட்-19 தொற்று மக்கள் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியைக் கவனித்து கொள்ளும் கட்டாயத்தில் வைத்துள்ளது.

  நம் உடலில் உள்ள நோயெதிர்ப்பு அமைப்பு அனைத்து வகையான நோய்களையும் எதிர்த்துப் போராடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உயிருக்கு ஆபத்தானது. சில நேரங்களில் நோயெதிர்ப்பு அமைப்பு பலவீனமடைய தொடங்குவது எதிர்பாராத நோய்கள் ஏற்பட வழிவகுக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவதை பல்வேறு அறிகுறிகள் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடியும். தொற்று நீடிக்கும் இந்த தருணத்தில் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியின் சில அறிகுறிகளை நீங்கள் அறிந்து கொள்வது அவசியமாகிறது.

  அடிக்கடி சளி - இருமல்..

  நீங்கள் அடிக்கடி சளி மற்றும் இருமல் உள்ளிட்ட பிரச்சனையால் அவதிப்பட்டால் அல்லது வானிலை மாற்றத்தால் உங்களுக்கு நோய் தொற்று (infection) ஏற்பட்டால், இவை உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு பலவீனமடைந்து வருவதற்கான முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும்.

  New Year Resolution 2022 : வருகிற புத்தாண்டிலிருந்து உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த உறுதிமொழிகள்..!

  அடிக்கடி சோர்வு..

  எந்த காரணமும் இல்லாமல் நீங்கள் அடிக்கடி சோர்வாக உணர்ந்தால் அல்லது அடிக்கடி உங்கள் உடல் உறுப்புகளில் நீண்ட நேரம் வலி இருந்தால் அது பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியின் மற்றொரு அறிகுறியாகும்.

  வயிறு தொடர்பான நோய்கள்..

  நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான மற்றொரு முக்கிய அறிகுறியில் வயிறு தொடர்பான பிரச்சனைகளும் அடங்கும். நம் நோயெதிர்ப்பு மண்டலத்தில் கிட்டத்தட்ட 70 சதவிகிதம் செரிமான மண்டலத்தில் அமைந்துள்ளது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. எனவே அடிக்கடி வயிற்று வலி, மலச்சிக்கல் மற்றும் குமட்டல் மற்றும் வாந்தி உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் அதற்கு குறைவான நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு காரணமாக இருக்கலாம்.

  காயங்கள் மெதுவாக ஆறுவது..

  தீக்காயம், வெட்டு அல்லது கீறல் உள்ளிட்ட காயங்கள் விரைவாக ஆறுவது ஆரோக்கியமான நோயெதிர்ப்பு செல்களை சார்ந்துள்ளது. ஆனால் உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு மந்தமாக இருந்தால் காயங்கள் சீக்கிரம் ஆறாமல் நீண்ட நாள் கழித்து தான் குணமாகும். வலுவான நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆரோக்கியமான உணவு, குறைந்தது தினமும் 8 மணிநேர தூக்கம், மல்டிவைட்டமின்கள், தியானம் மற்றும் வழக்கமான உடற்பயிற்சி ஆகியவை உதவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

  First published: