• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

மழை

மழை

சென்னையில் ஒருசில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும்.

  • Share this:
    நீலகிரி, கோயமுத்தூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இம்மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெயியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் ஆகஸ்ட்டு 5, 6 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயமுத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

    வரும் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நீலகிரி கோயமுத்தூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    9ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயமுத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

    Must Read : பள்ளிப் பாடப்புத்தகங்களில் தலைவர்களின் சாதிப் பெயர்கள் நீக்கம்

    சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை :

    அரபிக்கடல் பகுதிகளில், இம்மாதம் 5 முதல் 9ஆம் தேதி வரையில், தென் மேற்கு, வடக்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: