• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்.... இந்த மாவட்டங்களில் இன்று மிக கனமழை

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்.... இந்த மாவட்டங்களில் இன்று மிக கனமழை

மழை

மழை

சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழகத்திற்கு ஆரஞ்சு அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் என்றும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் மாவட்டங்கள் பற்றிய விவரங்களையும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்து அறிவித்துள்ளது.

    தெற்கு வங்கக்கடல் பகுதியில் (4.5 கி.மீ. உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இது வரும் நாட்களில் மேற்கு, வடமேற்கு திசையில் தமிழக கரையை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்திருந்தது.

    இதன் காரணமாக, இன்று (வியாழக்கிழமை) ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய வட கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் இன்று முதல் மீண்டும் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கூறியிருந்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, சென்னையில் கன மழை பெய்வது மேலும் ஒரு நாளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னைக்கு கன மழை வருவது தாமதமாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சென்னையை பொறுத்தமட்டில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது.

    26ஆம் தேதி (நாளை) தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், சென்னை திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    27ஆம் தேதி சென்னை, கடலூர், விழுப்புரம், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், சேலம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    28ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், நீலகிரி, கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை

    சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு இன்று மீனவர்கள் செல்லவேண்டாம். 26ஆம் தேதி தமிழக கடலோர பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில்சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம்.

    இதேபோல 27ஆம் தேதி, 28ஆம் தேதிகளில் தமிழ்நாடு மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Must Read :  ஆதாரில் பெயர் மற்றும் முகவரி மாற்றுபவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை!

    இந்நிலையில், நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக போடிநாயக்கனூர், ராமநாதபுரத்தில் தலா 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக சங்கரன்கோவிலில் 6 செ.மீ., ராமேஸ்வரம், கூடலூர், வீரபாண்டி, ஆயிக்குடி, கடலாடி, ஆழியார், சூரங்குடியில் தலா 5 செ.மீ., தேக்கடி, வாலிநோக்கம், திருவாடானை, மாயனூர், மண்டபம், முதுகுளத்தூர், பாம்பன், கொடுமுடி, சிவகாசி, கழுகுமலை, கடம்பூர், ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்செந்தூர், ஆர்.எஸ்.மங்கலம், காயல்பட்டினம், ராஜபாளையத்தில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: