ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அடுத்த 3 மணி நேரம் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்

அடுத்த 3 மணி நேரம் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்

மழை

மழை

Weather update | வடகிழக்குப் பருவமழை கடந்த 29-ம் தேதி தொடங்கிய நிலையில், தமிழகத்தில் மழை தீவிரமடைந்து வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தமிழ்நாட்டில் 5 நாட்கள் மழை நீடிக்கும்  என  சென்னை  வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வட இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வடகிழக்குப் பருவமழை கடந்த 29-ம் தேதி தொடங்கிய நிலையில், தமிழகத்தில் மழை தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில்,  தமிழகத்தில்  அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நீலகிரி மற்றும் கரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Also see...தொடரும் கனமழை - 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

    மேலும் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Heavy Rainfall, Meteorological dept, Tamil Nadu