• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னை உட்பட 6 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை - வானிலை மையம்

சென்னை உட்பட 6 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை - வானிலை மையம்

கோப்பு படம்

கோப்பு படம்

மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டி உள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வந்தது.

  • Share this:
    தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தின் பல மாவட்டங்களில் கத்தரி வெயில் சுட்டெரித்து வருகிறது. கத்தரி வெயில் மே இறுதி வரை தொடரும் என்பதால் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும்.

    தமிழகத்தின் சில மாவட்டங்களில் கோடை மழை பெய்து மக்களை நிம்மதி அடையவைத்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டி உள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வந்தது.

    இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றம் கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: