• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும் - வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும் - வானிலை மையம்

மழை

மழை

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடைக்காலத்தில் வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் கத்தரி வெயில் ஒரிரு நாட்களுக்கு முன் தொடங்கியது. கத்தரி வெயில் மே இறுதி வரை தொடரும் என்பதால் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழகத்தின் சில மாவட்டங்களில் கோடை மழை பெய்து மக்களை நிம்மதி அடையவைத்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டி உள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வந்தது. தேனி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் சோத்துப்பாறை அணை நிரம்பி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் விருதுநகர், மதுரை, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது,

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: