ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அடுத்த ஓரிரு மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் மழை பெய்யும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த ஓரிரு மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் மழை பெய்யும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மழை

மழை

Weather update | தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29ஆம் தேதி ஒட்டி துவங்கக்கூடும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் ஓரிரு மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில், இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க | திமுக அரசைக் கண்டித்து பாஜக இன்று ஆர்ப்பாட்டம்  

    தமிழக கடலோர  மாவட்டங்கள் மற்றும்  நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு  இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Published by:Anupriyam K
    First published:

    Tags: MET, MET warning, Rainfall, Weather News in Tamil