ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அடுத்த 3 மணி நேரத்திற்குள் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை..!

அடுத்த 3 மணி நேரத்திற்குள் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை..!

கனமழைக்கு வாய்ப்பு

கனமழைக்கு வாய்ப்பு

Weather update | வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    அந்த வகையில் இன்று, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கரூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க | ஓசி என பேசியதற்கு வருத்தம் தெரிவித்த பொன்முடி...

    மேலும், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Published by:Anupriyam K
    First published:

    Tags: MET, MET warning, Meteorological dept, Rain, Weather News in Tamil