ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இந்த 18 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு இடியுடன் மழை.. வானிலை மையம் தகவல்

இந்த 18 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு இடியுடன் மழை.. வானிலை மையம் தகவல்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Weather Update: செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

  ஆந்திரா மாநிலம் ஒங்கோல் அருகே வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை நோக்கி நகன்று வருவதால் சென்னை உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்று கன மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

  அந்த வகையில், சென்னை. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, சேலம், திருச்சி, நாமக்கல், கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரங்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  மேலும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Heavy rain, Heavy Rainfall, MET warning, Meteorology department, Regional Meteorological Centre