ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அடுத்த 3 மணிநேரத்துக்கு இந்த மாவட்டங்களில் மழை வெளுத்துவாங்கப்போகுது - வானிலை மையம் எச்சரிக்கை

அடுத்த 3 மணிநேரத்துக்கு இந்த மாவட்டங்களில் மழை வெளுத்துவாங்கப்போகுது - வானிலை மையம் எச்சரிக்கை

மாதிரி படம்

மாதிரி படம்

Weather update | வடகிழக்குப் பருவமழை கடந்த 29-ம் தேதி தொடங்கிய நிலையில், தமிழகத்தில் மழை தீவிரமடைந்து வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் 5 நாட்கள் மழை நீடிக்கும்  என  சென்னை  வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வட இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வடகிழக்குப் பருவமழை கடந்த 29-ம் தேதி தொடங்கிய நிலையில், தமிழகத்தில் மழை தீவிரமடைந்து வருகிறது.

    இதையும் படிங்க | தொடர் கனமழை.. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூரில், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Published by:Anupriyam K
    First published:

    Tags: Weather News in Tamil