ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அடுத்த 3 மணி நேரம் இந்த 14 மாவட்டங்களில் மழை நீடிக்கும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த 3 மணி நேரம் இந்த 14 மாவட்டங்களில் மழை நீடிக்கும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

நாமக்கலில் வெளுத்து வாங்கிய கனமழை- சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்!

நாமக்கலில் வெளுத்து வாங்கிய கனமழை- சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்!

Weather update | வடகிழக்குப் பருவமழை கடந்த 29-ம் தேதி தொடங்கிய நிலையில், தமிழகத்தில் மழை தீவிரமடைந்து வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 14 மாவட்டங்களில் மிதமான மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் 5 நாட்கள் மழை நீடிக்கும்  என  சென்னை  வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வட இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வடகிழக்குப் பருவமழை கடந்த 29-ம் தேதி தொடங்கிய நிலையில், தமிழகத்தில் மழை தீவிரமடைந்து வருகிறது.

    இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், தஞ்சை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Published by:Anupriyam K
    First published:

    Tags: Heavy rain, Weather News in Tamil