ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அடுத்த 3 மணி நேரத்திற்குள் இந்த மாவட்டங்களில் எல்லாம் மழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த 3 மணி நேரத்திற்குள் இந்த மாவட்டங்களில் எல்லாம் மழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மழை

மழை

வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  இதையும் படிங்க | மின் முறைகேட்டை தடுக்க நுகர்வோர் ஆதார் எண்ணை இணைக்க திட்டம்- அமைச்சர் செந்தில் பாலாஜி

  அந்த வகையில் மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Meteorological dept, Rain, Weather News in Tamil