Home /News /tamil-nadu /

தமிழகத்தின் இந்த 13 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய மழை - வானிலை ஆய்வுமையம்

தமிழகத்தின் இந்த 13 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய மழை - வானிலை ஆய்வுமையம்

மழை - கோப்புப் படம்

மழை - கோப்புப் படம்

Weather Update | சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    தமிழகத்தின் திருநெல்வேலி, திருவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு தகவல் தெரிவித்துள்ளது.

    இலங்கையின் மீது நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பரவலாக பெய்து வருகிறது.

    இந்நிலையில் சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், காஞ்சிபுரம், ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம், விழுப்புரம், காஞ்சிபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Also Read : சென்னையில் ஓடாத மின் மீட்டருக்கு ₹73,000 மின்கட்டணம்... வாடிக்கையாளர் அதிர்ச்சி

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

    Also Read : மத்திய அமைச்சராகிறார் பா.ஜ.க தலைவர் எல்.முருகன்- அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியீடு

    மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Weather, Weather Update

    அடுத்த செய்தி