முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெறவில்லை - முதல்வர் பழனிசாமி

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெறவில்லை - முதல்வர் பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

நெடுஞ்சாலைத் துறையில் திமுகவைப் பின்பற்றியே ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகவும், அதில் ஊழல் நடைபெறவில்லை எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்தநாளை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்திற்கு சென்று அண்ணாவின் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலரஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து காஞ்சிபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர், நெடுஞ்சாலைத் துறையில் ஊழல் நடைபெறவில்லை. திமுக ஆட்சிக்காலத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறைகளில் சிங்கிள் டெண்டர் என்ற அடிப்படையில் ஒப்பந்தம் விடப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சியில் இதுவரை சிங்கிள் டெண்டர் விடவில்லை என விளக்கம் அளித்தார்.

மேலும், சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் கட்சி ஆரம்பித்து விட்டதாகக் குற்றம்சாட்டினார். அதிமுக ஆட்சியை அழிக்க நினைக்கும் டிடிவி தினகரனை ஒருபோதும் மன்னிக்க முடியாது என்று முதல்வர் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பெஞ்சமின், உதயகுமார், முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

First published:

Tags: ADMK, DMK, Edappadi Palaniswami, Tender Scam, TTV Dhinakaran