• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கோடையில் தமிழகத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்!

கோடையில் தமிழகத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்!

 2018ல் தமிழகத்தில் பெய்ய வேண்டிய மழை, 960 மி.மீ., ஆகும். ஆனால், 811 மி.மீ., மழை மட்டுமே பெய்தது.அதேபோல, 2019 ஜனவரி முதல் மே வரை பெய்ய வேண்டிய சராசரி மழை, 108 மி.மீ., ஆகும். ஆனால், 34 மி.மீ., மழை மட்டுமே பெய்துள்ளது.

2018ல் தமிழகத்தில் பெய்ய வேண்டிய மழை, 960 மி.மீ., ஆகும். ஆனால், 811 மி.மீ., மழை மட்டுமே பெய்தது.அதேபோல, 2019 ஜனவரி முதல் மே வரை பெய்ய வேண்டிய சராசரி மழை, 108 மி.மீ., ஆகும். ஆனால், 34 மி.மீ., மழை மட்டுமே பெய்துள்ளது.

ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் விவசாய கிணறுகளில் தண்ணீர் எடுத்து சுத்திகரிப்புக்கு பின்னர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கோடை வெயில் காரணமாக பல முக்கிய நீர்நிலைகள் வறண்டு வருவதால், தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உருவாக்கியுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை இயல்பைவிட 14 சதவீதம் குறைவாக பொழிந்ததால், இந்த ஆண்டு கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே முக்கிய நீர் நிலைகளில் தண்ணீர் மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது.

பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள மேட்டூர், முல்லைப் பெரியாறு, பவானிசாகர், உள்ளிட்ட அணைகளின் மொத்த கொள்ளளவான 198 டிஎம்சி நீரில் தற்போது 53 டிஎம்சி நீர் மட்டுமே இருப்பு உள்ளது.

இந்த நீரைக் கொண்டு ஏப்ரல் 3- வது வாரம் வரை மட்டுமே குடிநீர் மற்றும் பாசன தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. எனவே கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க நடவடிக்கைகளை எடுக்கும்படி தமிழக பொதுப்பணித்துறை சார்பில் குடிநீர் வாரியத்திடம் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

தண்ணீர் மாதிரி படம்


அணைகளின் நீர் இருப்பை மட்டும் நம்பியிருக்காமல் மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளவும், இதற்காக 158 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தும் அரசு நடவடிக்கை எடுத்தது.

சென்னை குடிநீருக்கு முக்கிய நீர் ஆதாரங்களான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் தண்ணீர் இல்லாததால், குடிநீர் தேவையை சமாளிக்க சிக்கராயபுரம் கல்குவாரிகளில் இருந்து ராட்சத குழாய் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படுகிறது.

இதன் மூலம் சென்னை மாநகருக்கு நாளொன்றுக்கு 3 கோடி லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் விவசாய கிணறுகளில் தண்ணீர் எடுத்து சுத்திகரிப்புக்கு பின்னர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், சோழவரம், புழல் ஏரிகளில் ஆங்காங்கே குட்டை போன்று தேங்கியிருக்கும் நீரை மின் மோட்டார்கள் மூலம் உறிஞ்சி குடிநீர் தேவைக்கு பயன்படுத்தவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர்.

கோப்புப் படம்


இந்த பணிகள் நிறைவடைந்ததை அடுத்து ராட்சத குழாய் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு சென்னை மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்கு இன்று முதல் விநியோகிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏரி நீர் முழுவதுமாக உறிஞ்சிப்பட்டதும், ஏரியை தூர்வாரும் பணிகளை தொடங்க உள்ளதாகவும் பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Also see... ஈரோடு மாவட்டம் பவானி அருகே இளைஞர் விஷமருந்தி 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: