தமிழக அரசு ஆளுநருக்கு எதிராக செயல்பட்டுவிட்டது - பா.ஜ.க துணைத்தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வேண்டும் என்பதுதான் பா.ஜ.கவின் நிலைப்பாடு என்று கூறியுள்ள பாஜக மாநிலத் துணைத்தலைவர் அண்ணாமலை, தமிழக அரசு ஆளுநருக்கு எதிராகச் செயல்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.

தமிழக அரசு ஆளுநருக்கு எதிராக செயல்பட்டுவிட்டது - பா.ஜ.க துணைத்தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு
அண்ணாமலை
  • Share this:
திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் காங்கயம் தொகுதி அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வந்த அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், திருப்பூர், கோவை, ஈரோடு போன்ற மேற்கு மாவட்டங்களில் விவசாய நிலங்கள் வழியாகச் செயல்படுத்தப்பட்டுவரும் உயர்மின் கோபுர திட்டங்களுக்கும் மத்திய அரசுக்கும் சம்பந்தமில்லை. தந்தி சட்டத்தின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்தான் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை முடிவு செய்கிறார். மாவட்ட ஆட்சியர் என்பவர் மாநில அரசு அதிகாரியாக இருக்கும்போது, இதில் மத்திய அரசுக்கு சம்பந்தமில்லை என்று கூறினார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வேண்டும் என்பதுதான் பிஜேபியின் நிலைப்பாடு என்று கூறிய அண்ணாமலை, தமிழக அரசு ஆளுநருக்கு எதிராகச் செயல்பட்டுவிட்டதாகவும் ஆளுநர் காலதாமதப்படுத்திவிட்டதாக தான் பார்க்கவில்லை என்றும், ஒரு ஜனநாயக நாட்டில் இது போல நடப்பது சகஜம்தான் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து இடஒதுக்கீட்டுக்கு எதிராக பாஜக இருப்பதாக பரப்பப்படுவதில் அரசியல் உள்ளதாகவும் பிற்படுத்தப்பட்டோர் முன்னேறவேண்டும் என்றுதான் பாஜக நினைக்கிறது என்றும் தெரிவித்தார்.


Also read: 7.5 % உள் ஒதுக்கீட்டுக்கான அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுமேலும் கூறுகையில், மனுஸ்மிருதிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. விவாதத்துக்காக திருமாவளவன் எடுத்துவரும் அந்தப் புத்தகம் திராவிடர் கழகம் மொழிபெயர்த்தது; வில்லியம் ஜோன்ஸ் மனுஸ்மிருதியை மொழிபெயர்த்தபோது அவரின் திட்டம் இந்து ஒற்றுமையை உடைத்து மத மாற்றம் செய்வதே. அதனால் அதை ஏற்றுகொள்ள முடியாது என்றார்.

ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தில் மத்திய அரசு கொரோனா காலத்தில் ஒதுக்கிய 20 லட்சம் கோடியில் ரூ.3 லட்சம் கோடி தமிழகத்துக்கு கொடுக்கப்பட்டது. ஆனால், இதுபற்றி எதுவும் பேசாமல் ஜி.எஸ்.டி நிலுவைத்தொகை பற்றி மட்டுமே பேசுவது தமிழகத்தின் அரசியல் எனவும், சுயசார்பு இந்தியா திட்டத்தில் 3 லட்சம் கோடி மத்திய அரசு தரவில்லை என தமிழக முதல்வர் கூறுவாரா? அப்படியில்லை என கூறினால்தான் அது விவாதத்துக்கு உரியது. தற்போது மாநிலங்களுக்குத் தரவேண்டிய ஜி.எஸ்.டி வரிப்பணம் மத்திய அரசிடம் இல்லை என்பதால் மாநில அரசுகள் வாங்கும் கடனுக்கு மத்திய அரசு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது எனக் கூறினார்.
First published: October 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading