• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • என் மீது தவறு இல்லை.. பழிவாங்கும் நோக்கில் கைது நடவடிக்கை: நீதிமன்றத்தில் குமுறிய மீரா மிதுன்!

என் மீது தவறு இல்லை.. பழிவாங்கும் நோக்கில் கைது நடவடிக்கை: நீதிமன்றத்தில் குமுறிய மீரா மிதுன்!

என் மீது தவறு இல்லை.. பழிவாங்கும் நோக்கில் கைது நடவடிக்கை: நீதிமன்றத்தில் குமுறிய மீரா மிதுன்!

என் மீது தவறு இல்லை.. பழிவாங்கும் நோக்கில் கைது நடவடிக்கை: நீதிமன்றத்தில் குமுறிய மீரா மிதுன்!

குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நடிகை மீரா மிதுன், தன் மீது தவறு இல்லை எனவும், தன்னை பழி வாங்கும் நோக்கில் காவல் துறை கைது செய்ததாகவும் மேஜிஸ்ட்ரேட் முன்பு தன் தரப்பு விளக்கங்களை தெரிவித்துள்ளார்.

  • Share this:
    சமூகவலைதளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்துவது நடிகை மீரா மிதுனின் வாடிக்கை. சமீபத்தில் இவர் பட்டியலின மக்கள் குறித்து பேசியது கடும் சர்ச்சைக்குள்ளானது. இதனையடுத்து இவர் மீது எஸ்.சி. எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் புகார்கள் குவிந்தது.

    இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் பிரிவு போலீஸார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக காவல்துறை தரப்பில் மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனையடுத்து மீரா மிதுன் தலைமறைவானார்.

    இதனையடுத்து சமூகவலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார், அதில், “என்னை தாராளமாக கைது செய்யுங்கள், காந்தி, நேரு எல்லாம் சிறைக்கு செல்லவில்லையா என்ன? என்னை கைது செய்வது நடக்காது அப்படி நடந்தால் அது கனவில் மட்டுமே நடக்கும்.

    எல்லாரையும் நான் தவறானவர்கள் என்று கூறவில்லை.என்னை தொந்தரவு செய்தவர்களை மட்டுமே நான் கூறினேன். என்னை தொந்தரவு செய்கிறார்கள் புகார் கொடுத்தேன் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை..’ என கூறியிருந்தார்.

    Also read: விசாரணையிலும் அதே சத்தம்தான்.. அடம்பிடிக்கும் மீரா மிதுன் - ஆண் நண்பரையும் அள்ளி வந்த போலீஸ்

    இதனிடையே, மீராமிதுன் கேரளாவில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்து. இதனையடுத்து திருவனந்தபுரம் விரைந்த சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் பிரிவு போலீஸார் மீரா மிதுனை கைது செய்தனர். அவர் தங்கியிருந்த இடத்துக்கு போலீஸார் சென்றதும் அதனையும் வீடியோவாக எடுத்துப்போட்டார் மீரா மிதுன்.

    தொடர்ந்து, கேரளாவில் கைதான நடிகை மீரா மிதுனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் போலீஸ் வாகனம் மூலமாக சென்னை கொண்டு வந்தனர். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சென்னை மத்திய குற்றப்பிரிவில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு அவரை சைதாப்பேட்டை 17வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    அப்போது நடிகை மீரா துன், தன் மீது தவறு இல்லை எனவும், தன்னை பழிவாங்கும் நோக்கில் காவல் துறை கைது செய்ததாகவும் மேஜிஸ்ட்ரேட் முன்பு தன் தரப்பு விளக்கங்களை தெரிவித்துள்ளார்.

    மேலும் தான் குறிப்பிட்ட அந்த சமுதாய அனைத்து மக்களையும் தவறாக கூறவில்லை எனவும், தன்னை பழிவாங்கிய திரை துறையினரை மட்டும் தான் அவ்வாறு குறிப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மீரா மிதுன் தரப்பு விளக்கத்தை கேட்ட மேஜிஸ்ட்ரேட், வழக்கு விசாரணைக்கு வரும் போது வழக்கறிஞரை வைத்து வாதாடிக்கொள்ளும்படியும், மேலும் போலீசார் சமர்பித்த வீடியோ ஆதாரங்களில் அடிப்படையில் நீதிமன்ற காவல் பிறப்பிக்க உத்தரவிடுவதாக தெரிவித்துள்ளார். தொடரந்து, வரும் ஆகஸ்ட் 27ம் தேதி வரை மீரா மிதுனை நீதிமன்ற காவலில் வைக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

    இதையடுத்து, நடிகை மீரா மிதுனை புழல் சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: