Home /News /tamil-nadu /

அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை தவறு இல்லை: முன்னாள் அமைச்சர் பொன்னையன் அதிரடி

அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை தவறு இல்லை: முன்னாள் அமைச்சர் பொன்னையன் அதிரடி

அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை தவறு இல்லை: முன்னாள் அமைச்சர் பொன்னையன் அதிரடி

அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை தவறு இல்லை: முன்னாள் அமைச்சர் பொன்னையன் அதிரடி

பொதுக்குழு, செயற்குழு தொடர்பாக நாளை நடைபெறும் அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு தேவைப்பட்டால் அழைப்பு விடுக்கப்படும் என்று பொன்னையன் தெரிவித்துள்ளார்.

ஒற்றைத் தலைமைக் கோரிக்கை தவறில்லை என அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.கவில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இருந்து கட்சியை வழிநடத்தி வருகின்றனர். இந்தநிலையில், வரும் ஜூன் 23-ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதற்காக கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. இதனால் மீண்டும் ஒற்றை தலைமை விவகாரம் அதிமுகவில் சர்ச்சையாக எழுந்தது.

இந்நிலையில், ஒற்றை தலைமை சர்ச்சை குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, ஒற்றைத் தலைமை சர்ச்சை ஏன் உருவாக்கப்பட்டது என்று எனக்கே தெரியவில்லை. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒற்றை தலைமை குறித்து பேட்டி அளித்ததால் இந்த பிரச்சனை பூதாகரமாகியுள்ளது.

எதிர்கட்சியாக நாம் இருக்கிறோம். நாம் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும். மீண்டும் அதிமுக ஆட்சியை நிலைநிறுத்த பணியாற்ற வேண்டுமே தவிர இந்த நேரத்தில் இந்த ஒற்றைத் தலைமை பிரச்சனை தேவைதானா? பொதுச்செயலாளர் பதவிக்கு யாரும் வரக்கூடாது என்று பொதுக்குழுவில் தீர்மானம் போடப்பட்டுள்ளது. அதனால், இனி பொதுச்செயலாளர் பதவிக்கு வேறு ஒருவரை கொண்டு வருவது ஜெயலலிதாவுக்குச் செய்கிற துரோகம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒற்றை தலைமை பற்றி நானோ, ஈபிஎஸ்சோ அல்லது 2 பேரும் இணைந்தோ பேசியது அல்ல. இரட்டைத் தலைமயே நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. அதனால், இரட்டைத் தலைமையே தொடர வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஒற்றைத் தலைமை கோரிக்கையை தவறு என்று சொல்ல முடியாது, ஆனால் அதுகுறித்த முடிவை பொதுக்குழுதான் எடுக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

வரும் 23ம் தேதி நடைபெறவுள்ள அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் தொடர்பாக பொன்னையன், வைகைச்செல்வன், ஆர்.பி.உதயகுமார், செம்மலை ஆகியோர் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொன்னையன், " ஒற்றைத் தலைமை குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசியதற்காக ஜெயக்குமார் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் உண்மை இல்லை. ஒற்றைத் தலைமை தேவையா என்பது குறித்து கட்சித் தலைமையும், பொதுக்குழுவுமே முடிவு செய்யும். 100க்கு ஆயிரம் சதவீதம் பொதுக்குழு திட்டமிட்டபடி 23ம் தேதி நடக்கும்.

எல்லா கட்சியிலும் பிரச்சனைகள் எழுவது இயல்புதான்.. ஒற்றைத் தலைமை கோரிக்கையை தவறு என்று சொல்ல முடியாது, ஆனால் அதுகுறித்த முடிவை பொதுக்குழுதான் எடுக்கும்.

பொதுக்குழு, செயற்குழு தொடர்பாக நாளை நடைபெறும் அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு தேவைப்பட்டால் அழைப்பு விடுக்கப்படும்.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் நாளை இறுதி வடிவம் பெறும் என்று அவர் கூறினார்.
Published by:Esakki Raja
First published:

Tags: ADMK, Edappadi palanisamy, O Pannerselvam, OPS - EPS

அடுத்த செய்தி