முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Exclusive : பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் தவறில்லை - டிடிவி தினகரன்

Exclusive : பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் தவறில்லை - டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்.

டிடிவி தினகரன்.

“பாஜக தற்போது தமிழகத்தின் மீது கரிசனத்துடன் நடந்துகொள்வது போன்று நடந்து வருகின்றனர். அதற்கான சமிக்ஞைகள் தெரிகின்றன.” - டிடிவி தினகரன்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் தவறில்லை என நியூஸ் 18 தமிழ்நாட்டிற்கு அளித்த பிரத்தியேகப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நியூஸ் 18 தமிழ்நாட்டின் வெல்லும் சொல் நேர்காணல் நிகழ்ச்சியில் டிடிவி தினகரன் பங்குபெற்றார். இந்த நிகழ்ச்சியில் அதிமுகவில் தற்போது நிலவி வரும் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையேயான பிரச்சினைகள், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்த கேள்விகள் முன் வைக்கப்பட்டன.

2024-ல் எங்களை மதிக்கக்கூடிய தேசியக் கட்சியுடன் கூட்டணி என அறிவித்துள்ளீர்கள், இதை பாஜகவிற்கான சமிக்ஞை என எடுத்துக்கொள்ளலாமா எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு “இங்கே இரண்டே வாய்ப்புகள்தான் உள்ளன. ஒன்று பாரதிய ஜனதா கட்சி அல்லது காங்கிரஸ். நான் நேற்று தெரிவித்திருந்தது போல் காங்கிரஸை விட்டு திமுக விலகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.” எனத் தெரிவித்தார்.

மேலும் “2023-ம் ஆண்டு நவம்பர் டிசம்பர் மாதங்களில் கட்சியின் நிர்வாகிகள் இந்த முறை தனியாகப் போட்டியிட வேண்டாம் என நினைக்கிறார்கள். ஆனால் நான் தனியாக போட்டியிடுவதற்கும் தயாராக இருக்கிறேன்.”எனத் தெரிவித்தார்.

அது மட்டுமில்லாமல் ”இந்திய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில் அமுமுக ஒரு அணிலைப் போல் செயல்படும்.” எனத் தெரிவித்தார். ஆர் கே நகர் தேர்தலின்போது எந்த காலத்திலும் நான் பாஜகவுடன் கூட்டணி வைக்கமாட்டேன் என அவர் அறிவித்திருந்தது குறித்து வைக்கப்பட்ட எதிர்க்கேள்விக்கும் டிடிவி பதிலளித்தார்.

அதற்கு “ஏற்கெனவே எங்கள் தலைவர்களெல்லாம் கூட்டணி வைத்த ஒரு இயக்கம். ஆனால் அவர்களுடைய செயல்பாடு தமிழ்நாடு மக்களுக்கு பெரும் கஷ்டங்களைக் கொடுக்கும் திட்டங்களை அவர்கள் அமல்படுத்தினார்கள். ஸ்டெர்லைட் பிரச்சினையின்போது குருவிகளைப் போல் மக்கள் சுடப்பட்டபோது அவர்கள் தமிழக அரசை என்னவென்றே கேட்கவில்லை. அதனால் வாழ்நாள் முழுவதும் அவர்களுடன் கூட்டணி வைக்கக்கூடாது என நினைத்தேன்.” என பதிலளித்தார்.

மேலும் “அப்படி இருந்த பாஜக தற்போது தமிழகத்தின் மீது கரிசனத்துடன் நடந்துகொள்வது போன்று நடந்து வருகின்றனர். அதற்கான சமிக்ஞைகள் தெரிகின்றன. தமிழகத்துக்குக் கொடுக்கவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையைக் கொடுத்திருக்கிறார்கள். அதே போல் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நடத்தவேண்டும் என அவர்கள் வலியுறுத்தவில்லை. 2019-ம் ஆண்டுக்குப் பிறகு அவர்களிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.

First published:

Tags: AMMK, BJP, TTV Dinakaran