தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் அல்ல; பற்றாக்குறைதான் - அமைச்சர் எஸ்.பி வேலுமணி

குடிமராமத்து திட்டம் அற்புதமான திட்டம் எனவும், கரிகால சோழனுக்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இத்திட்டத்தை செயல்படுத்தி உள்ளார் என அமைச்சர் எஸ் பி வேலுமணி சட்டப்பேரவையில் கூறினார்.

news18
Updated: July 1, 2019, 1:43 PM IST
தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் அல்ல; பற்றாக்குறைதான் - அமைச்சர் எஸ்.பி வேலுமணி
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
news18
Updated: July 1, 2019, 1:43 PM IST
தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் என்பதே இல்லை. பற்றாக்குறைதான் என்று அமைச்சர் எஸ் பி வேலுமணி இன்று நடந்த சட்டப்பேரவையில் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கே.ஆர்.ராமசாமி கவன ஈர்ப்பில் குறித்து பேசுகையில், ஏரி குளங்கள் தூர் வாரப்படவில்லை. நிலத்தடி நீர் மட்டம் உயர்த்தப்பட வேண்டும். குடி மராமத்து பணிகளை அரசே முழுமையாக செய்ய வேண்டும். மக்களை இணைத்து செயல்படுத்துவதால் முழுமையாக மேற்கொள்ள முடியாது என தெரிவித்தார்.

மேலும் 10 ஆண்டுகளில் தண்ணீரை பார்க்க கூட முடியாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்த அவர், அரசாங்கத் திட்டங்கள் கிராமப்புறங்களுக்கும் செல்லவில்லை எனவும், குடிநீர் பிரச்சினை குறித்து ஒவ்வொரு பகுதியிலும் தொகுதியிலும் இருப்பதை முதல்வர் தெரிந்துகொள்ள ஒரு நாள் முழுவதும் பேச அனுமதிக்க வேண்டும் என்றார்.

பின்னர், பதிலளித்த அமைச்சர் எஸ் பி வேலுமணி, தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் என்பதே இல்லை. பற்றாக்குறைதான் என்றார். மேலும் குடிமராமத்து திட்டம் அற்புதமான திட்டம் எனவும், கரிகால சோழனுக்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இத்திட்டத்தை செயல்படுத்தி உள்ளார் என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து பேசியவர், ஆன்லைனில் புக்கிங் செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்க வெளி மாவட்டங்களில் இருந்து லாரிகள் மூலம் தண்ணீர் எடுத்து அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இயற்கை பொய்த்து போன நிலையிலும் தமிழகம் முழுவதும் தங்கு தடையின்றி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார் அவர் தெரிவித்தார்.

மேலூம் படிக்க... அத்திவரதர் சிலை குளத்தில் வைக்கப்பட அரசியல் குழப்பம் காரணமா? பேராசிரியர் சங்கநாராயணன் கூறுவது என்ன?

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...