• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் தடுப்பூசி இருப்பு இல்லை – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் தடுப்பூசி இருப்பு இல்லை – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

ராதாகிருஷ்ணன்

ராதாகிருஷ்ணன்

தமிழகத்துக்கு தடுப்பூசிகளை அதிகளவில் வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் நேற்று பல்வேறு இடங்களில் நடந்த தடுப்பூசி முகாம்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,”தமிழகத்தில் 2-வது கட்ட மெகா தடுப்பூசி முகாமுக்கும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததாக கூறினார்.

    தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 4.35 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் 4.12 கோடி தடுப்பூசிகளை அரசே செலுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் தீர்ந்துவிடும். இந்த நிலையில் கூடுதல் தடுப்பூசிகளை வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதோரின் எண்ணிக்கையும் இங்கு  அதிகமாகவே உள்ளது. எனவே உடனே தடுப்பூசிகளை அதிகளவில் வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம். என்றார்.
    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: