ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டிய அவசரம் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Youtube Video

ஸ்டெர்லைட் ஆலையில் தற்போது ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வரும் சூழலில், ஆலையை மூட வேண்டிய அவசரம் இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

 • Share this:
  சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கரும்பூஞ்சை நோய்க்கு தமிழ்நாட்டில் 3 ஆயிரத்து 596 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். டெங்கு காய்ச்சலுக்கு ஜனவரி முதல் தற்போது வரை 2,090 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தமிழ்நாட்டில் 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளதெனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

  மத்திய அரசிடமிருந்து இதுவரை 1 கோடியே 59 லட்சத்து 26 ஆயிரத்து 50 தடுப்பூசிகளை பெற்றுள்ளதாக கூறிய அமைச்சர், இதுவரை 1 கோடியே 59 லட்சத்து 58 ஆயிரத்து 402 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார். தற்போது 1 லட்சத்து 74 ஆயிரத்து 730 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார்.

   

  மேலும் 55,052பேருக்கு இதுவரை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரொனோவிற்கு சிசிச்சை பெற்றுள்ளனர்.தமிழகத்தில் கரும்பூஞ்சை நோயால் 3,596 பேர்  பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர்  என்று கூறினார்.

  ஸ்டெர்லைட் ஆலையில் தற்போது ஆக்ஜிசன் உற்பத்தி செய்யப்பட்டு வரும் சூழலில்  ஆலையை மூட வேண்டிய அவசரம் இல்லை.கொரொனோ இன்னும் முடிவடையாத நிலையில் 3வது அலை வரக்கூடிய பாதிப்பு இருக்கும் என்று கருதபடக்கூடிய நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதில் அவசரப்படக்கூடாது.

  ஜூலை 31 ஆம் தேதி வரை மட்டுமே ஸ்டெர்லைட் செயல்பட அரசு அனுமதி அளித்திருந்த நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: