• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நிர்மலா தேவி விவகாரத்தில் துளியும் தொடர்பு இல்லை - ஆளுநர் மாளிகை விளக்கம்

நிர்மலா தேவி விவகாரத்தில் துளியும் தொடர்பு இல்லை - ஆளுநர் மாளிகை விளக்கம்

கோப்பு படம்

கோப்பு படம்

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் துளியும் தொடர்பு இல்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் துளியும் தொடர்பு இல்லை, ஆளுநர் மாளிகைக்குள் நிர்மலா தேவி வந்ததே இல்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

    பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகையை தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்ட நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டு பின்னர், அவர் மீதான வழக்கை ரத்து செய்த நீதிமன்றம் அன்றைய தினமே விடுவித்தது. ஆளுநர் மாளிகை சார்பில் அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்தே நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதாக தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகைக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த தொடர்பும் இல்லை. உண்மை தன்மையை ஆராயமல் புலனாய்வு என்ற பெயரில் செய்திகள் வெளியிடப்படுகின்றன. இது பத்திரிகை தர்மத்துக்கு மாறானது. ஆளுநருக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ எச்சரிக்கை விடுப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது.

    தமிழகத்தின் முதல் குடிமகனான ஆளுநர் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் செய்திகள் தொடர்ந்து வருகின்றன. நீண்ட நாட்களாக பொறுமை காத்த பின்னரும், அவதூறுகள் தொடர்ந்ததால் புகார் அளிக்கப்பட்டது.

    கடந்த ஓராண்டில் நிர்மலா தேவி ஆளுநர் மாளிகைக்குள் நுழைந்ததே இல்லை. ஆளுநர் மதுரைக்கு சென்ற போது கூட பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்கியது இல்லை. ஆளுநருக்கோ, ஆளுநரின் செயலாளருக்கோ அல்லது ஆளுநர் மாளிகை பணியாளர்களுக்கோ இந்த விவகாரத்தில் துளியும் தொடர்பு இல்லை. போலீஸ் விசாரணையில் நிர்மலா தேவி கொடுத்துள்ள வாக்குமூலத்தால் உண்மை வெளிவரும்.

    என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: