நூறுக்கும், சோறுக்கும், பீருக்கும் விலை போகாதீர்கள்: விஜய பிரபாகரன் வருத்தம்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன்

வேலை, சினிமாவில் திறமைக்கு வாய்ப்புண்டு ஆனால் அரசியலில் திறமைக்கு அங்கீகாரம் இல்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  திமுகவும் அதிமுகவும் காசு கொடுத்து கூட்டத்தை சேர்க்கின்றனர். இப்ப கொரானா வராதா? தற்போது மொழி, மதம், சாதியை வைத்து அரசியல் பண்ணுகின்றனர். அரசியல் கேவலமாக போய்க்கொண்டிருக்கிறது. வேலை, சினிமாவில் திறமையுள்ளவர்கள் வாய்ப்பு கிடைக்கிறது ஆனால் அரசியலில் திறமையாளர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை. என்னை யூஸ் பண்ணிக்கிங்க என்னை போன்ற இளைஞர்களுக்கு வாய்ப்பளியுங்கள் என சத்தியமங்கலத்தில் நடந்த பிரசாரத்தில் விஜய பிரபாகரன் தெரிவித்தார்.

  சத்தியமங்கலம் புதிய பேருந்து நிலையத்தில் பவானிசாகர் தனி சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் ஜி.ரமேஷை ஆதரித்து விஜய பிரபாகரன் திறந்த வேனில் பேசுகையில், தேர்தலில் முதல் முறையாக பிரசாரம் செய்கிறேன். கோபியில் சினிமா படபிடிப்புக்காக அப்பா இங்கேயே தங்கியிருந்தார். அதனால் இந்த தொகுதி எங்களுக்கு அறிமுகமான தொகுதி. தேமுதிக மாற்றத்தை விரும்புகிறது. பாஜக, பாமக ஆகிய  கட்சிகளுக்கு கொடுத்த மரியாதையை ஏன் எங்களுக்கு அதிமுக தரவில்லை. அரசியலில் கொடி பிடிப்பது பாட்டுப்பாடுவது முக்கியமல்ல. ஆனால் மக்கள் பிரச்னைக்காக கூட்டணி வைத்துள்ளோம்.

  எங்களை யூஸ் பண்ணிக்கிங்க, என்னை போன்ற  இளைஞர்களுக்கு அரசியல் வெறி உள்ளதால் எங்களுக்கு வாய்ப்பு அளியுங்கள். ஏன் எங்களை நீங்கள் ஆதரிக்கவில்லை. எங்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள். தற்போது சாதி, மதம் மொழியை வைத்து அரசியல் செய்து வருகின்றனர்.அரசியல் கேவலமாக போய்க்கொண்டிக்கிறது.
  திமுகவும், அதிமுகவும் மாறி மாறி குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.

  தற்போது 1000, 1500 ரூபாய் தருகிறேன் என கூறுபவர்கள் கொரானா காலத்தில் மக்களின் கெஞ்சியும் ஏன் இந்த பணத்தை தரவில்லை. ஓட்டுக்காக பேரம் பேசுகின்றனர். சிந்தியுங்கள். அப்பா கொடுத்துக்கொண்டே இருக்க அட்சயப்பாத்திரம் இல்லை. அவர் சாதாரண மனிதன். நூறுக்கும் சோறுக்கும் பீருக்கும் விலை போகாதீர்கள். உங்களால் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க வக்கில்லையா?".

  வேலை, சினிமாவில் திறமைக்கு வாய்ப்புண்டு ஆனால் அரசியலில் திறமைக்கு அங்கீகாரம் இல்லை. திறமையான ஆட்களை அரசியலுக்கு கொண்டு வாருங்கள். காசு கொடுத்து மக்கள் விலைக்கு வாங்க முடியும் என திமுக, அதிமுக நம்புகின்றனர்.உங்களால் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கமுடியாதா என விஜய பிரபாகரன் பேசினார்.

  செய்தியாளர் தினேஷ் - கோபிச்செட்டிபாளையம்
  Published by:Arun
  First published: