முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 40 தொகுதிகளின் வெற்றிதான் இலக்கு... கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை..!

40 தொகுதிகளின் வெற்றிதான் இலக்கு... கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை..!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

திமுக ஆட்சியை பிடிக்க தொடங்கிய கட்சி இல்லை. ஏழை எளிய மக்களுக்கு விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு தொடங்கிய கட்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள பிருந்தாவன் திருமண மண்டப மைதானத்தில், மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுமார் 10,000 பேர் இணையும் இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மாற்றுகட்சியிலிருந்து திமுகவில் இணைய பல பேர் காத்துக்கொண்டிருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜியும், கோவை செல்வராஜும் கூறினார்கள். ஆனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வந்ததால் அப்போது இணைக்க முடியவில்லை என தெரிவித்தார். மேலும் மாற்றுக் கட்சியிலிருந்து தாய் கழகத்திற்கு வருவோரை தாய்யுள்ளத்தோடு வரவேற்பதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுகவை தாய் கழகம் என்று சொல்கின்றோம். இதற்கு வரலாறு இருக்கின்றது. ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என அண்ணா இந்த கட்சியை துவங்கவில்லை. ஏழை எளிய மக்களுக்கு விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு, அடிதட்டில் வீழும் மக்களுக்கு, தமிழ் சமுதாயத்திற்காக இந்த கட்சி துவங்கப்பட்டது.

நாட்டில் வரலாற்றில் இடம்பெற்று இருக்க கூடிய கட்சிகள உண்டு. திடீர் என தோன்றும் கட்சிகள் தோன்றியவுடனே நாங்கதான் அடுத்த முதல்வர், அடுத்த எங்க ஆட்சி என்று சொன்னவர்கள் இப்போது அனாதைகளாக இருக்கின்றனர். 1949ல் கட்சி துவங்கினாலும், 1957 ல் தேர்தல் களத்திற்கு வந்து 67 ல் திமுக ஆட்சி அமைத்தோம். அண்ணா ஓர் வருடத்தில், ஆட்சியில் இருந்தபோது பல முக்கிய தீ்ர்மானங்களை கொண்டு வந்தார். சீர்திருத்த திருமணம், இரு மொழி கொள்கை, தமிழ்நாடு என்ற பெயர் சூட்டல் ஆகியவற்றை தீர்மானமாக கொண்டு வந்தார். தமிழன் தன்மானத்தோடு வாழ காரணம் இந்த தீர்மானங்கள்தான்.

தமிழக வரலாற்றில் 184 என்ற எண்ணக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆட்சி பொறுப்பேற்ற கட்சி திமுகவை தவிர வேறு எதுவும் இல்லை. நெருக்கடி காலத்தில் திமுக ஆட்சியில் இருந்தபோது இந்திரா காந்தியிடம் இருந்து தூது வந்தது. நெருக்கடியை எதிர்க்க கூடாது என சொன்னார்கள். அதை ஏற்க மறுத்து நெருக்கடி நிலையை ரத்து செய்ய வேண்டும், தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கடற்கரையில் மிகப்பெரிய கூட்டம் நடத்தி தீர்மானம் போட்டோம். இதனால் ஆட்சி கவிழ்க்கப்பட்டு நாங்கள் கைது செய்யப்பட்டோம் என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், திமுகவை போல வெற்றி பெற்ற கட்சியும் கிடையாது. தோல்வி பெற்ற கட்சியும் கிடையாது. தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட உறுதிமொழிகள் காப்பாற்றப்பட்டுள்ளது. 6 வது முறையாக நடைபுறும் திமுக ஆட்சி, சொல்வதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்யும் ஆட்சியாக என்னுடைய ஆட்சி இருக்கின்றது.

ஏற்கனவே நடந்த சட்டமன்ற தேர்தலில் 10 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் திருமகன் ஈவேரா வெற்றி பெற்றார். அவர் மறைவிற்கு பின்னர் நடந்த ஈரோடு கிழக்கு இடைதேரதலில், கூட்டணி சார்பில் நிற்க வைத்த வேட்பாளர், 66,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கின்றார். இதற்கு காரணம் இந்த ஆட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்டு இருக்கும் நம்பிக்கை. அதனால்தான் இவ்வளவு பெரிய வித்தாயசத்தில் வெற்றி பெற்றுள்ளோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் இதே போன்ற வெற்றியை பெற்றெடுக்க வேண்டும்

இந்த ஆட்சியின் திட்டங்கள் தொடர, சாதனைகள் மலர நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற இன்றே களமிறங்க வேண்டும். மதம், சாதியை பயன்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சியை கலைத்து விட வேண்டும் என செயல்படுகின்றனர். கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் ஒரு இடத்தை மட்டும் இழந்தோம். இந்த முறைஅதுவும் இழக்க கூடாது. பாண்டிசேரி உட்பட 40 இடத்தையும் பெற வேண்டும் என தெரிவித்த அவர், நாடும் நமதே..நாளையும் நமதே.. இந்தியா முழுவதும் வெற்றி பெற நாம் முயற்சியில் ஈடுபட போகின்றோம் அதற்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

First published:

Tags: CM MK Stalin, DMK