மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றால் தனிமைப்படுத்துதல் இல்லை - தமிழக அரசு

தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காமல் பேருந்தில் பயணிக்கும் மக்கள்

தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லுபவர்களுக்கு கட்டாய பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 • Share this:
  கொரோனா பரவல் காரணமாக பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டனர்.  இதனால் வியாபாரம் போன்ற காரணங்களுக்காக மாவட்டங்களிடையே பயணிப்பவர்கள் அவதிப்பட்டு வந்த சூழலில் இ பாஸ் முறை ரத்து செய்யப்பட்டதால் மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பவர்களில் அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க...மூன்றாம் கட்டத்தை எட்டியுள்ள அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி - விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என டிரம்ப் அறிவிப்பு

  அதேசமயம் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் அனைவரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கட்டாயம் நோய்த்தொற்று இல்லை என்ற சான்றை அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.  மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லுபவர்களுக்கு கட்டாய பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் இல்லை. கொரோனா பரவல் காரணமாக பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
  Published by:Vaijayanthi S
  First published: