அதிமுகவை அழிக்க யார் நினைத்தாலும் நான் முன்னின்று காப்பேன் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் பிளவுப்பட்ட அணிகள் தான் இணைந்ததோ தவிர மனங்கள் இணையவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதிமுகவின் பொதுக் குழு கூட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் என ஈ.பி.எஸ் ஆதரவு நிர்வாகிகள் கூறி வரும் நிலையில், அதனை தள்ளி வைக்க வேண்டும் என ஓ.பி.எஸ் வலியுறுத்தியுள்ளார். திட்டமிட்டபடி, வரும் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் எனவும், அதில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் நிச்சயம் பங்கேற்பார் என்றும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர், கே.பி. முனுசாமி கூறியுள்ளார்.
Also Read: அதிமுக பொதுச் செயலாளர் ஆகிறாரா எடப்பாடி பழனிசாமி? - தனித் தீர்மானம் இன்று இறுதி செய்ய வாய்ப்பு
பொதுக்குழுவுக்கான தீர்மானத்தை இறுதிசெய்யும் குழுவின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில், எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்வதற்கான தனித் தீர்மானம் இறுதி செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க வாய்ப்பு உள்ளதாகவும், இன்றைய கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஐடி விங்க் நிர்வாகிகளுடன் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், “ அதிமுக பலம் பொருந்திய கட்சி. அதிமுக எந்த காலத்திலும் வீழ்ந்ததாக சரித்திரம் கிடையாது. அதிமுகவை அழிக்க யார் நினைத்தாலும் நான் முன்னின்று காப்பேன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கட்சியை பலவீனப்படுத்த சிலர் முயற்சி செய்கிறார்கள் அதனை முறியடித்து உங்களுடைய துணைக்கொண்டு அதிமுக எதிர்காலத்தில் பலம் பொருந்திய கட்சியாக இருக்கும். அதற்கு உங்களுடைய ஐடி-விங்க் பங்கு மிக முக்கியம். அதை முறையாக செய்ய வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என அந்த வீடியோவில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.